செவ்வாழையின் நன்மைகள் என்னென்ன..? கண்கள் சம்பந்தப்பட்ட அத்தனை கோளாறுகளையும் இந்த செவ்வாழை எப்படி நீக்குகிறது தெரியுமா..?

 

செவ்வாழையில், வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன.. இதனால், சிறுநீரகங்களில் கற்களை சேரவிடாமல் செவ்வாழைகள் தடுக்கின்றன.

*உடல் எடை:*
இரத்த அழுத்தத்தையும் பராமரித்து வைத்திருக்கின்றன.. இதனால், இதய நோய்களை எளிதில் நம்மிடம் அண்டவிடுவதில்லை. இன்னும், சொல்லப்போனால், அதிக ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த செவ்வாழை சிறந்த தீர்வாகும்.

நுரையீரல், கல்லீரல், இதயம், குடல் போன்ற முக்கிய உடலுறுப்புகளின் செயல்பாட்டிற்கு இந்த செவ்வாழைகள் உதவுகின்றன.. நம்முடைய குடலில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை 10 மடங்கு உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் இந்த செவ்வாழையில் உள்ளதாம்.. மலச்சிக்கலை போக்கக்கூடிய இந்த செவ்வாழை, உடல் எடை சீராக வைத்து கொள்ளவும் உதவுகிறது.

இந்த செவ்வாழையை சிறிதாக நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலே, கண்களிலுள்ள உஷ்ணம் நீங்கிவீடும்… அதேபோல, மாலைக்கண் நோயால் அவதிப்படுபவர்கள், இரவு உணவிற்குப்பிறகு, தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தாலே நிவாரணம் கிடைக்குமாம்.

*செவ்வாழை:* தினமும் 1 செவ்வாழை சாப்பிட்டு வந்தால், சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.. சொறி, சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு உள்ளிட்ட தோல் பிரச்சனைகள் தீரும். கிடைக்கும்.

*வாரம் 1* செவ்வாழையை சாப்பிட்டு வருவதால், உடலிலுள்ள தொற்று நோய் பாதிப்புகளும் தீருமாம்.. அந்த அளவுக்கு கிருமிகளை தாக்கி அழிக்கக்கூடிய சக்தி செவ்வாழைப்பழத்திற்கு உள்ளதாம். அதேபோல, ஒருநாளைக்கு 2 செவ்வாழையை, 48 நாள் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கிவிடும் என்கிறார்கள்.

*சிறுநீரகம்:* செவ்வாழையில், கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், பற்களுக்கு மிகவும் வலு தருகிறது.. பலவீனமான பற்கள் இருந்தாலே அல்லது பல் ஆடுவது போல இருந்தாலோ, ஈறுகள் பலவீனமாக இருந்தாலோ, அத்தனைக்கும் செவ்வாழை மருந்தாகிறது.. எனவே, தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், வாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்கிறதாம்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைய உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுத்துவிடுகிறது.. ஏற்கனவே சிறுநீரக கற்கள் பிரச்சனை இருப்பவர்களும் செவ்வாழையை வாரம் 2 முறை சாப்பிட்டால் நல்லதாம்.

Read Previous

படித்ததில் மனதை தொட்ட பதிவு..!! கட்டாயமாக அனைவரும் படிக்கவும்..!!

Read Next

மாமனார் இல்லாத வீடு.. அந்த வீட்டிற்கு செல்லும் மருமகளுக்கு எப்படி இருக்கும் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular