கண்டிப்பாக இந்த ஆன்மீக குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள் பெண்களே..!!
வெள்ளிக்கிழமையில் பருப்பு சேர்த்து குழம்புகள் வைக்கவில்லை என்றால் சாதம் வடிக்கும்போது சாஸ்திரத்திற்கு மூன்று துவரம் பருப்பை சேர்த்து வடிப்பது நல்லது.
வீட்டில் ஒட்டகை அடிப்பது அடுப்புகளை கழுவுவது வீட்டை சுத்தம் செய்வது மற்றும் பூஜை பொருட்களை சுத்தம் செய்வது இது போன்ற விஷயங்களை வெள்ளிக்கிழமை அன்று செய்வதை முழுமையாக தவிர்க்க வேண்டும். இரவு சமையல் அறையை சுத்தம் செய்துவிட்டு மறுநாள் லட்சுமி கடாட்சத்துடன் சமையலை தொடங்குவது நல்லது. அப்போதுதான் மகாலட்சுமியின் பார்வை அந்த வீட்டில் மேல் இருக்கும். அம்மாவாசை அன்று சமைக்க கூடாத காய்கறிகள் முட்டைக்கோஸ், நூக்கல், முள்ளங்கி, பீன்ஸ், கத்திரிக்காய், காலிஃப்ளவர், பட்டாணி போன்றவைகளை ஒருபோதும் அமாவாசை அன்று சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது. பெண்கள் பொதுவாக காலை நேரங்களில் தண்ணீர் தெளித்தோ அல்லது சாணம் சேர்த்து தண்ணீர் தெளித்து கோலமிடும் போது தெற்கு பார்த்து நிறைய படி கோலம் போடக்கூடாது. அம்மாவாசை அல்லது வீட்டில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது போன்ற நாட்களில் கோலம் போடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.




