தமிழரின் ‘கள் பானம்’ குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுகின்றதா?
சர்வதேச வணிகத்தின் சூழ்ச்சியால் அழிக்கப்பட்ட கள்..
மதுபானங்களின் வருகைக்குப் பின் கள் குடிப்பதை அடியோடு நிறுத்திவிட்டார்கள். கள்ளும் ஒரு மதுபான வகைதான் என்றாலும் இது பழந்தமிழரின் பானம் ஆகும். மனித வரலாற்றில் இனக்குழுக்கள் ஆண், பெண் பேதம் பார்க்காமல் பல்வேறு போதை பானங்களை பருகியுள்ளனர் என்பதை நமது வரலாறும், புராணங்களுமே எடுத்துரைக்கின்றன.
ஔவையே குடித்தார்:
இப்புவிப் பரப்பில் தமிழ் மொழியை பாடல்களால் வளர்த்த ஔவையார், அதியமானை ஒரு பாடலில் புகழ்ந்து எழுதும்போது, தனக்கு அதியமான் கள் பருகக் கொடுப்பான் என்றும், கள்ளை குடித்துவிட்டு தன்னிடம் பாடல் பாடச் சொல்லி அதை கேட்டு ரசிப்பான் என்றும் குறிப்பிடுகிறார்.
பலமரக் கள்:
தென்னை மரத்தில் மட்டுமல்ல, பனை மரம், அத்தி மரம், அரச மரம், ஈச்ச மரம், வேப்பிலை மரம் என பல வகை மரங்களில் இருந்தும் கூட கள் இறக்கப்பட்டுள்ளது என்பதை சங்க இலக்கியங்கள் உரைக்கின்றன. இவ்வளவு ஏன், சப்பாத்திக்கள்ளியில் இருந்தும் கூட கள் எடுக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த இன மரங்கள் பலவும் சர்வதேச வணிகத்தின் சூழ்ச்சியால் அழிக்கப்பட்டுள்ளன என்பதை உணர முடிகிறது அல்லவா? அவர்களிடம் இருந்து தப்பித்தது தென்னையும், வேம்பும் மட்டுமே.
சித்த மருத்துவம்:
தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கள் முக்கியத்துவம் பெறுகிறது. கள்ளின் மருத்துவப் பயன்களை தெளிவாக பதிவு செய்து சென்றுள்ளனர் சித்தர்கள். சித்தர் பாடல்களின் பல இடங்களில் கள்ளின் மருத்துவ மகத்துவங்களை அறிந்துகொள்ள முடிகிறது. பனை மரத்து கள்ளால் ஆண்களுக்கு உடல் வலிமையையும், விந்து சக்தியும் அதிகரிக்கும் என அகத்தியர் குணப்பாடம் கூறுகிறது.
தீரும் நோய்கள்:
கள்ளு குடிப்பதனால் தீராத வலிகள், அழல் நோய்கள், இரத்தப்போக்கு, கரப்பான் ஆகிய நோய்களை தீர்க்க முடியும். குறிப்பாக அத்தி மரத்தில் இருந்து எடுக்கப்படும் கள்ளை குடித்து வந்தால் இறுதி வாழ்நாள் வரை இளைமையாகவே வாழ முடியும் என குறிப்பு கிடைக்கிறது. தாய்ப்பாலுக்கு இணையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கள் தமிழர்களின் வரலாற்றில் கற்பக விருட்சம் ஆகும்.
100 நாடுகளில்:
உலக நாடுகளுள் உள்ள 100 நாடுகளில் இன்னும் கள் பருகுவது நடப்பில் உள்ளது. ஏன் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் கூட கள் குடிக்கிறார்கள். ஆனால் தமிழனின் பாரம்பரிய பானமான கள் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. சட்டங்களை போட்டு தடை செய்திருக்கிறார்கள். கிராமிய பொருளாதாரம் குறைந்துள்ளது.
ஈவெரா என்ன செய்தார்?
1927ல் காந்தியாரின் மதுவிலக்கு கொள்கையை ஆதரித்து, தமிழகத்தில் கள்ளுக்கடை எதிர்ப்பை தூண்டினார். தனது தென்னந்தோப்பில் இருந்த ஐநூறு தென்னை மரங்களை ஒரே இரவில் வெட்டி வீழ்த்தினார். ஆனால் சில உண்மைகளை அறிந்துகொண்ட பிறகு, 1963ல் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு கள் வேண்டுவோர் மாநாட்டில் கலந்துகொண்டு கள்ளுக்கு பகிரங்க ஆதரவையும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




