தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம் வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாகவும், கட்சியை வலுப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கூட்டத்திற்கு பா.ஜ.க தமிழக பொறுப்பாளர் கிஷன் ரெட்டி தலைமை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தற்காக மதுரையில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் அமித்ஷாவுடன், கிஷன் ரெட்டி பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மத்திய உள்துறை அமைச்சர் வருகைக்காக காவல் துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது




