தோசை மாவு எத்தனை நாட்கள் வரை பயன்படுத்த வேண்டும்..?? தெரியவில்லை என்றால் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Oplus_131072

 

மாவு அரைத்த உடன் அதை இறுக்கமான பாத்திரத்தில் வைத்து ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து விட வேண்டும்.

 

தேவைப்படும் போது 2 அல்லது 3 மணி நேரத்துக்கு முன்பு மாவை வேண்டிய அளவு பாத்திரத்தில் எடுத்து அறைவெப்பநிலைக்கு வந்த உடன் இட்லி, தோசை, ஊத்தாப்பம் என தேவைக்கேற்ப பயன்படுத்திகொள்ளலாம்.

 

எல்லா மாவையும் ஒரே பாத்திரத்தில் சேர்த்து வைக்காமல் இரண்டு பாத்திரங்களாக சேர்த்து வைக்கலாம். காற்றுபுகாத பாத்திரங்கள், குளிரூட்டல் போன்றவை சீராக இருக்கும்படி பார்த்துகொள்ள வேண்டும்.

 

சுலபமாக சமைக்கவும் மாவு தயாரிக்கும் நேரத்தை மிச்சம் செய்யவும் முயற்சிக்கும் விதத்தில் அதிக நாள் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பயன்படுத்துகிறோம். ஆனால் இவை ஆரோக்கியமானது அல்ல

அதனால் வீட்டில் தேவைப்படும் மாவின் அளவுக்கேற்ப நீங்கள் தேவையான அளவு மட்டுமே தயாரித்து வைப்பது நல்லது.

 

ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்துபவர்களே அதிகம் என்றாலும் 2-4 நாட்களுக்குள் இந்த மாவை முடித்துவிட வேண்டும். அதிலும் அவை அதிகம் புளிப்பில்லாமல் இருக்க வேண்டும்.

 

தயாரித்த உடன் புதிதாக புளிக்க வைக்கப்பட்ட மாவு சிறந்த பலனை அளிக்கிறது. அதனால் நீண்ட காலம் மாவு சேமித்து வைக்க வேண்டாம்.

 

அப்படி வைத்திருந்தால் மாவு அதிகமாக புளிப்பு ஏற்பட்டு மேலும் பல பாதிப்புகளை உண்டு செய்யலாம்.

அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு என்று 3:1 என்னும் விகிதத்தில் சிறிது வெந்தயம் சேர்த்து ஊறவைத்து மாவாக அரைத்து பயன்படுத்தப்படும் மாவு சிறந்தது. உடலில் குடல் பாக்டீரியாக்களை மேம்படுத்தகூடியது.

ஆனால் சரியான முறையில் புளிக்க வைத்து மேலும் புளிப்பு ஆவதற்குள் அதை பயன்படுத்தி விட வேண்டும். இல்லையெனில் அதன் ஊட்டச்சத்து இழந்து அதிக புளிப்புத்தன்மையுடன் ஆரோக்கியமே பாதிக்கும்.

இயன்றவரை ஃப்ரெஷ் காய்கறிகள், ஃப்ரெஷ் பழங்கள் என்று சொல்வது போன்று மாவையும் அவ்வபோது தயாரித்து குறைந்த நாட்களில் பயன்படுத்த்துவது நல்லது. பாதுகாப்பானது.

 

Read Previous

உங்கள் வாழ்க்கை துணையின் உரிமைக்கும் ஒரு எல்லை இருக்கு தெரியுமா?.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

வெயிட் லாஸ் பண்ண உதவும் டாப் 10 low கலோரி காய்கறிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular