*எந்த சைஸ் டிவியை எவ்வளவு தூரத்திலிருந்து பார்க்கணும்?
அன்றைய காலகட்டம் முதல் இன்றைய நவீன காலம் வரைக்கும் அனைத்து வீடுகளிலும் தவறாமல் இருப்பது என்னவென்றால் அது டிவி. கிராமப்புறங்களில் விவசாய நிலங்களில் வேலை பார்ப்பவரும் மாலை 6 மணி ஆகிவிட்டால் அந்த டிவி முன்பு வந்து உட்கார்ந்து விடுவார். நகரப்புறங்களில் இருப்பவர்களும் டிவி முன்னாடி உட்கார்ந்து விடுவார்கள். ஏனென்றால் அவர்களின் ஓய்வு நேரத்தில் டிவி பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். சிலர் சீரியல் சிலர் படங்கள் என பெரும்பாலான மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கிறார்கள். இந்நிலையில் டிவி பார்க்கும் பொழுது டிவிக்கும் நமக்கும் இடையேயான இடைவெளி என்பது பற்றி பெரும்பாலானோரக்கு தெரிவதே இல்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டிவி பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர் ஆனால் எவ்வளவு இடைவெளி விட்டு உட்கார வேண்டும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றே. இந்நிலையில் எந்த சைஸ் டிவியை எவ்வளவு தூரத்தில் இரந்து நாம் பார்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
*24″ இஞ்ச் சுமார் 4.5 அடி
42″ இஞ்ச் சுமார் 5 அடி
48″ இஞ்ச் சுமார் 5.5 அடி
50″ இஞ்ச் சுமார் 6 அடி
55″ இஞ்ச் சுமார் 6.5 அடி
65″ சுமார் 8 அடி




