ஆண் என்பவன் பொறுப்பின் சுமை சுமக்கும் பாறை..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

ஆண் என்பவன்…

 

திருமணமாகி இருந்தாலும் ஆகாவிட்டாலும் ஆண் தான் அந்த குடும்பத்தின் ஆதாரம்….

 

திருமணம் ஆகும் முன்பு பெற்றோருக்கும் அக்கா தங்கை உறவுகளுக்கும் உயிரை கொடுத்து உழைப்பவன்…

 

திருமணம் ஆன பிறகு பெற்றோர் உற்றார் உறவினர் தன் மனைவி குழந்தைகள் மனைவியின் உறவினர்கள் என அனைவரையும் ஒற்றை ஆலமரமாக தாங்கி வழிநடத்துபவன்…..

 

அவனுடைய வாழ்வாதாரமே அவன் குடும்பம் தான்….

 

அவனின் வாழ்வு குடும்பத்துக்கான போராட்டம்….

 

அவன் வெயிலில் கருகினாலும்,

வெயிலை அடியாளாக்குபவன்….

 

அவனின் சிரிப்புக்கு பின்னால்

ஒரு கண்ணீரின் ஆழம் இருக்கு…..

 

அவன் மௌனத்தில் கதை இருக்கு,

அவன் போராட்டத்தில் பெருமை இருக்கு…..

 

அவன் தோள் ஒவ்வொரு குடும்பத்தின் தூண்…..

 

அவன் வாழ்க்கை ஒரு பாதை, மற்றவர்களின் கனவுக்கு அடிப்படை…!

 

எல்லா ஆணும் பிறப்பில் நல்லவர்கள் தான்…..

 

அவர்கள் வளரும் சூழ்நிலையும் வாழும் சூழ்நிலையும் தான் நல்லவர்களாக கெட்டவர்களா என்பதை மாற்றி அமைக்கின்றது…

 

ஒவ்வொரு குடும்பத்தில் கலங்கரை விளக்கமும் அவனே.,..

 

ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்கண்ட தெய்வமும் கணவன் தான் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்….

 

ஆண் தான் ஒவ்வொரு குடும்பத்தின் ஆணிவேரும் ஆலமரம் போன்றவன்…..

 

ஆணை சுற்றித்தான் மனைவி குடும்பம் குழந்தைகள் எல்லாம்…..

 

ஒவ்வொரு ஆணும் தன் குடும்பத்தை மனமார நேசிக்கின்றான்….

 

ஒரு சிலர் விதிவிலக்கு அதை ஒன்றும் செய்ய முடியாது…..

 

தன் கஷ்டங்களை எப்பொழுதும் கண்ணீரால் வெளிப்படுத்தவே மாட்டான் மௌனத்தாலே கொன்று விட்டுச் செல்வான்…..

 

எப்பொழுதும் கலங்கி போகாமல் என்றாவது வெற்றி பெற்றே தீருவோம் என்று அயராது உழைப்பவன் தான் நல்ல ஆண்மகன்…..

 

அந்த ஆண் மகனுக்கு நல்ல குடும்பமோ அல்லது நல்ல மனைவியோ வாய்த்து விட்டால் அவனைப் போன்ற ஒரு புண்ணியம் செய்தவன் இந்த உலகில் வேறு யாரும் இருக்க மாட்டான்….

 

என்னவோ ஆண்கள் நல்லவங்க அப்படின்னு சொல்லி ஒரு பதிவு போட்டு இருக்கேன்……

 

உண்மையும் கூட அதுதான்…..

Read Previous

அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய எளிய பாட்டி வைத்தியம்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

அப்பா மாறவேயில்லை..!! இது போல் ஆயிரம் அப்பாக்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular