இக்காலத்துப் பெண்கள் எப்படிப்பட்ட மணமகனை எதிர்பார்க்கின்றனர்?.. படித்ததில் பிடித்தது..!!

எனக்கு வாழ்க்கை துணைவனாக வருபவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்றே எல்லோர் மனதிலும் இருக்கும் ஆசை தான். ஆனால் இங்கு நீயோ நானோ யாரும் தீங்கு செய்யாதவர்கள் அல்ல. அதனால், எனக்கு அவன் உண்மையா இருந்தால் போதும்.

என்னுடைய மனநிலையை புரிந்துகொள்ளும் ஆணாக இருக்க வேண்டும். அதே போல் அவனுக்கு வேண்டியதை நான் முழுமையாக செய்ய முடியாவிட்டாலும் கண்டிப்பா என்னால் முடிந்த வரை அவனுக்காக எதையும் செய்வேன்.

ஆணோ பெண்ணோ மனம் போதும் என சொல்லாது இன்னும் இதை விட நிறைவாக இருந்தால் நல்லாயிருக்கும் என தோன்றும். ஆனால் எனக்கு அவன் போதுமானதாக இருக்க வேண்டும் அதே போல் அவனுக்கு நான் போதுமானதாக இருக்க வேண்டும்.

உறவுகளுக்கு{பெண் வீட்டார் மாப்பிளை வீட்டார் பாகுபாடு இருக்க கூடாது} முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், அதே சமயம் சிறு சிறு விஷயங்களுக்கு அனுசரித்து போக வேண்டும்.

அவனால் முடிந்த நாள் ஒன்றில்{வாரம் ஒன்றோ அல்லது மாதம் ஒன்றோ} வெளியில் அழைத்து செல்ல வேண்டும்.

எவ்வளவு வேலை இருந்தாலும், ஒரு நாளும் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க தவறி விட கூடாது.

வரவு செலவு எல்லாம் எனக்கும் தெரியணும்.கஷ்டம் என்றால் கை கொடுக்க எப்போதும் நான் இருப்பேன். லாபம் என்றால் அதில் சிறு சேமிப்பு செய்யவும் வேண்டும்.

கோபம் ஆண்களுக்கு மட்டுமே ஒன்றானது அல்ல என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சொல்லும் சொல்லில் உண்மை இருந்தால் ஒருவரின் கோபத்தை புரிந்து செயல் பட வேண்டும்.

படிப்பு, நாம் இருவரின் வாழ்க்கையை சந்தோசமாக வைக்கும் அளவிற்கு படித்தால் போதும்.

வேலை-சம்பளம், இவ்வளவுதான் என்பதை உண்மையாக சொன்னால் அதற்கு ஏற்பால் போல் சமாளித்து கொள்வேன். ஆனால் முன்னேற்றம் வேண்டும், நாளை இரண்டாக வேண்டுமே தவிர குறைவாக கூடாது.

Read Previous

பாகற்காய் சாப்பிட்டால் தப்பி தவறி இந்த பொருட்களை வாயில் கூட வைக்காதீங்க..!! ஆபத்து நிச்சயம்..!!

Read Next

TNPL நிறுவனத்தில் Medical Officer காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular