காதலா..? காமமா..? எது ஆரோக்கியமான வாழ்வை தரும்…?
உலகம் தோன்றியதில் இருந்தே அன்புதான் எல்லாவற்றையும் இயங்க செய்கிறது. எவ்வளவு விஞ்ஞான வளர்ச்சி அடைந்தாலும் ஒவ்வொரு உயிர்களிடத்தில் இருக்கும் அன்பே மிகவும் மகத்தானது. இந்த அன்பிற்கு அடுத்தபடியாக இருப்பது காதலே.
“காதல்” இரு உயிரை ஓர் உயிராய் துடிக்க செய்யும். மனிதனின் வாழ்வில் காதல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாத ஒன்றே. ஆனால் காதல் எவ்வளவு முக்கிமோ அதே அளவிற்கு காமமும் முக்கியம்தான்.
இன்னொரு உயிரை உயிர்ப்பிக்கும் தன்மை இந்த இரண்டிற்கும் உண்டு. இருப்பினும் இவ்விரண்டில் எது ஆரோக்கியமான வாழ்வை தரும் என்பது நம்மில் பலரின் கேள்வியாக இருக்க கூடும். இது காலம் காலமாக இருந்து கொண்டிருக்கின்ற விவாதத்திற்குரிய கேள்வியே..’ இதற்கு விடை தெரிய வேண்டுமா… தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
#காமம் இரண்டு உயிர்களை ஒன்று சேர்த்து அவர்களின் மூலம் இன்னொரு உயிரை உயிர்ப்பிக்கும், அற்புத நிகழ்வு ஏற்பட காரணம் இந்த காமம்தான். ஆனால் காமம் என்பது காதலின்றியும் பிறரிடம் உடலுறவு கொள்ள முடியும் என்பதே. காமம் ஒரு சில காலம் வரையே நீடிக்க வல்லது. காமத்தை மட்டும் வைத்து கொண்டு நிம்மதியான ஆரோக்கியமான வாழ்வை வாழ இயலாது.
பெரும்பாலும் வயோதிக பருவத்தில் காமத்துக்கு இடம் இல்லாமல் போய்விடும். அப்போது காதலும் அன்புமே உறுதுணையாக இருக்கும்.
காமம் கொடுக்கும் நன்மைகளை விட காதல் பலமடங்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் எண்ணற்ற நன்மைகளை தரும்.
#காதலின்றி அணுவும் இயங்காது..! ஆரோக்கியமான வாழ்வு வேண்டுமென்றால் முதலில் அந்த வாழ்வில் அளவற்ற காதலும், அன்பும் இருத்தல் வேண்டும். காதல் இல்லாத வாழ்க்கை வெற்று போகும்.
ஒரு மனிதன் தனக்கு பிடித்தமான ஒருவர் மீது காதல் கொள்ளும் போது அளவற்ற நன்மைகள் உடலுக்கும் மனதுக்கும் ஏற்படும் என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது. ஆழமான காதல் இருவரின் பந்தத்தை வலுப்படுத்தும். வெறும் காமம் மட்டும் கொண்ட வாழ்க்கை விரைவிலேயே மன நிம்மதி இல்லாமல் செய்துவிடும்.
காதல் மட்டுமே உள்ள வாழ்க்கை எப்படியேனும் வெற்றி பெறும். ஏனென்றால் அவர்கள் ஒருவர்மீது ஒருவர் வைத்துள்ள புரிதல், அன்பு, நம்பிக்கை, அளவற்ற நேசம் ஆகியவையே காரணம்..
ஆரோக்கியமான நன்மைகளை தனக்குள்ளே கொண்டுள்ள இந்த காதல் மிகவும் மத்தானதுதான். காதல் மட்டுமே உள்ள வாழ்க்கையும் சில சமயங்களில் வெறுத்து போக கூடும். அதே போல காமம் மட்டும் இருக்கும் வாழ்வும் அப்படிதான். எனவே காதலும் காமமும் சேர்ந்த வாழ்வு இன்பத்தையே தரும். இவற்றில் காதலால் நீண்ட நாட்கள் வாழ முடியும். ஆனால் காமத்தால் அப்படி இயலாது.
மிஞ்சி போனால் காமம் அரை மணி நேரம் தான் .. காதல் ஆயுள் வரை இருக்கும்… காமம் இல்லாமல் வாழ்ந்திடலாம்.. உண்மையான காதல் இல்லாமல் வாழ முடியாது.




