ஒரு சில ஆன்மீக ரீதியாக ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது என்று நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே உள்ளது. இந்நிலையில் கண்டிப்பாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சில ஆன்மீக தகவல்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தனியாக தென்னை மரத்தை வீட்டில் வளர்க்கக்கூடாது. ஒற்றை பனை மரம் உள்ள இடத்தில் வீடு கட்டக்கூடாது. வீட்டு வாசலில் அல்லது நிலைக்கதவை திறந்த உடன் முருங்கை மரம் அல்லது மாமரத்தை பார்க்கக்கூடாது. நன்றாக வளர்ந்த வேப்ப மரத்தை அது மீண்டும் வளராமல் வெட்டப்பட்டால் அந்த வீட்டில் உள்ள ஒற்றுமை சந்தோசம் ஆரோக்கியம் கெட்டுவிடும். பெருமாள் கோவிலின் பின்புறம் சிவன் கணபதி கோவில் எதிர்புறம் வீடு கட்டக்கூடாது.




