இந்த பதிவு அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்..!! படித்ததில் ரசித்தது..!!

இந்த  பதிவு அனைத்து அம்மாக்களுக்கும் சமர்ப்பணம்.

அப்பா கட்டிய வீடா இருந்தாலும் அது எமக்கு அம்மா வீடு தான். அடுப்படியே அம்மாவின் அலுவலகம். அன்பு மட்டுமே எதிர்பார்க்கும் சம்பளம். எமக்கு காய்ச்சல் வந்தால் மருந்து தேவை இல்லை. அடிக்கடி வந்து தொட்டுப் பார்க்கும் அம்மாவின் கையே போதுமானது பிள்ளைகள் ஊரிலிருந்து கொண்டுவரும் பயணப்பயில் இந்த அம்மாக்கள் எதிர்பார்ப்பது இன்னும் கொஞ்சம் அழுக்கு துணிகளை.மகனுக்கான அப்பாவின் கோபத்திற்கெல்லாம் அம்மாவின் முதுகு தான் கிழக்கு. இங்கே பலரது அகராதியில் வீடு என்கிற சொல்லுக்கு நேரே அம்மா என்று உள்ளது .எந்த பொய் சொல்லியும் அம்மாக்களை ஏமாற்றி விட முடியும். சாப்பிட்டு விட்டேன் என்கிற அந்த ஒரு பொய்யைத் தவிர. பீஸ் கற்ற பணம் என்றால் பிள்ளைகள் அம்மாவை தான் நாடுகின்றன. காரணம் எப்படியும் வாங்கி கொடுத்து விடுவாள். அல்லது எடுத்துக் கொடுத்துவிட்டு திட்டு வாங்கிக் கொள்வாள். வீட்டுக்குள் அப்பாவும் இருந்தாலும் அம்மா என்று தான் கதவு தட்டுகிறோம்.  உலக அம்மாக்களின் தேசிய முழக்கம் இதுதான் என் புள்ள பசி தாங்காது என்ற ஒற்றை வரியில் அத்தனை அன்பும் அடங்கியுள்ளது.

Read Previous

தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

சர்க்கரை நோய் நம் வாழ்நாளில் வரவே கூடாது என்று நினைப்பவர்கள் இந்த கசாயத்தை அடிக்கடி குடிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular