வீட்டில் எலி தொல்லையா..?? இதோ உங்களுக்கான டிப்ஸ் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!
பல வீடுகளில் இருக்கும் பிரச்சனை இந்த எலி தொல்லை. இந்த எலி தொல்லைக்கு ஒரு தீர்வே கிடையாதா என புலம்பும் இல்லத்தரசிகள் தான் இங்கு அதிகம். வீட்டில் உள்ள எலி தொல்லையை எவ்வாறு போக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டில் உள்ள எலிகள் ஒயர்கள் மற்றும் மற்ற பொருட்களை சேதப்படுத்துவதோடு நோய் தொற்றையும் ஏற்படுத்துகின்றன.
எலிகளை விரட்ட எளிய வழி உள்ளது. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு பச்சை மிளகாய் அரவை சோப்புத்தூள் நிலக்கடலை ஆகியவற்றை சேர்க்கவும்.
இதை உருண்டைகளாக உருட்டி எலிகள் இருக்கும் பகுதிகளில் வைத்து விட வேண்டும். இதை எலிகள் சாப்பிட்டால் அவற்றிற்கு உடல் நலக்குறைவு ஏற்படும் இதனால் எலிகள் வீட்டிலிருந்து வெளியேறிவிடும் என கூறப்படுகிறது.




