சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு..!! சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்கவும்..!!
இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இருக்கும் ஒரு நோய் என்னவென்றால் அது சர்க்கரை நோய் தான். சர்க்கரை நோயை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கவனமாக இருக்க வேண்டும். இந்த நிலையில் சர்க்கரை நோயினால் உண்டாகும் புண் மற்றும் சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுக்குள் வர வைப்பது என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஆவாரம்பூ வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஆவாரம் பூவை நீரில் இட்டு கொதிக்க வைத்து தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் சர்க்கரை கட்டுக்குள் வருகிறது.
சர்க்கரை நோயாளிகள் காலில் ஏற்படும் புண்கள் அவ்வளவு எளிதில் ஆறுவதில்லை. பொன் வந்த இடத்தில் ஆவாரம்பூ பொடியை நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி பூச வேண்டும். இவ்வாறு செய்து வருவதால் காலில் ஏற்பட்ட புண்கள் விரைவாக ஆறும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.




