சென்னை அணியின் பரிதாப நிலை..!! பந்தாடிய ராஜஸ்தான்..!!

ஐபிலில் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் இன்று 7:30 மணியளவில் ராஜஸ்தான் அணிக்கும் சென்னை அணிக்கும் குவாஹாத்தியில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை, முதலில் பௌலிங் செய்வதாக முடிவெடுத்தது. கடந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியின் வீரர்கள் 182க்கு 9 விக்கெட்டுகளை விட்டு தனது பேட்டிங்கை முடித்தது. இதில், நிதிஸ் ராணா என்னும் வீரர் 81 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்ற வீரர்களும் அவருக்கு கய் கொடுத்து அசத்தினர். பௌலிங்கில் சென்னை அணி சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் மதீஷா புதிரான மற்றும் நூர் அஹ்மத் என்னும் வீரர்கள் தலா 28 ரன்களை வழங்கி 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய சென்னை அணி முதலில் பொறுமையாக தொடங்கியது.  சென்னையனியின் கேப்டன் ருதுராஜ் கைக்கவாட் 63 ரன்கள் எடுத்து அசத்தினார். மற்ற வீரர்கள் தனது பங்களிப்பை வழங்கி கடைசி பந்து வரை போட்டியில் நிலைத்திருந்தனர். ஆனால் இறுதியில் சென்னையனியால் வெறும் 176 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. போட்டியை வென்ற ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை இந்த வருடம் பதிவு செய்தது. மேலும், தொடர்ந்து இரண்டு போட்டிகளை தோற்று பரிதமான நிலையில் சென்னை இருக்கிறது.

Read Previous

கிராம்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா..!! கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு..!!

Read Next

அண்ணா பல்கலைக்கழத்தில் உங்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு..!! ரூ.60,000/- வரை சம்பளம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular