வீர தீர சூரன் பாகம்-2 இவ்வளவு வசூல் செய்ததா..!! விக்ரமுக்கு இதில் சந்தோஷமா இல்லையா..!!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருப்பவர் தான் விக்ரம். இவரை ரசிகர்கள் ஆசையாக சியான் என்று கூறுவார்கள். உடலை வருத்தி கதைக்கேற்ப தனது முழு பங்களிப்பை குடுக்கும் ஒரு நடிகர் தான் இவர். இவர் நடிப்பில் வந்த கடைசி சில படங்கள் விமர்சனம் ரீதியாகவும் சரி, மக்களிடமும் சரி நல்ல வரவேற்பை பெறவில்லை. இப்போது இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தான் வீர தீர சூரன் பாகம்-2.

இந்த படத்தை இயக்கியவர் இயக்குநர் அருண்குமார். இந்த படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை வழங்கிய இவர் இந்த படத்தில் மக்களிடம் ஒரு கலவையான வரவேற்பை பெற்றுள்ளார்.

ஒரு பக்கம் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வந்தாலும், கலவையான விமர்சனங்களையும் ரசிகர்கள் முன் வைத்து வருகிறார்கள். இந்நிலையில், தனது பாக்ஸ் ஆபிஸில் நாலு நாட்களுக்கான வீர தீர சூரன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அதாவது, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 27 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் கிடைத்துள்ளது. எதிர்பார்த்ததைவிட ஆவெரேஜ் ஆன வசூல் என பார்க்கப்படுகிறது.

Read Previous

துளசியை இப்படி சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்கிறதா..!! மக்களே அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

மியான்மரில் தொடர்ந்து நடைபெறும் சோகம்..!! கொத்து கொத்தாக சாகும் மக்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular