சிறுநீரகம் என்பது நம் உடலில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஒரு உறுப்பாகும். இதில், நமது உடலில் இருக்கும் யூரியா போன்ற கழிவுகளை இரத்தத்திலிருந்து பிரித்து சிறுநீராக வெளியேற்றும். ஆனால், இப்போது இருக்கும் காலத்தில் பல பேருக்கும் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதற்க்கு காரணம், சிறுநீரை தகுந்த நேரத்தில் கழிக்காமல் அடக்கி வைத்துக் கொண்டு இருப்பதால்தான் இந்த சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரக கல் போன்ற பிரச்சனைகள் வருகிறது.
இதனால் சிறுநீர் கழிக்கும் போது அதிக வலியும் எரிச்சலும் ஏற்படும். ஆகையால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த ஐந்து பழங்களுக்கு சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரக கல் பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மை உள்ளது.
மாதுளை பழம் சாறை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீரக பாதையில் உள்ள கழிவுகளை வெளியேறும். மேலும், தர்பூசணி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிட்டு வருவதால் சிறுநீரக கல் பிரச்சனை நாளடைவில் குணமாகும்.
இதுமட்டுமில்லாமல், ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி போன்ற பழங்கள் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல், சிவப்பு திராட்சை பழத்தை அதன் விதையோடு சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனைகள் குணமாகும்.




