Oplus_131072
முட்டை மசாலா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரைக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் பலவகையான முட்டை சம்பந்தமான ரெசிபிகள் உள்ளன. இந்நிலையில் அனைவருக்கும் பிடித்த வகையில் முட்டை மசாலா சுவையாக எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
நான்கு முட்டைகளை வேகவைத்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை சோம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து நீள்வாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் மூன்றும்,உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இடித்த இஞ்சி பூண்டு ஒரு மேசை கரண்டி, மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி, மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி, மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி,மல்லித்தூள் இரண்டு தேக்கரண்டி,கரம் மசாலா ஒரு தேக்கரண்டி சேர்த்து நன்கு வதக்கவும்.
மசாலா பச்சை வாசம் போனதும் மூன்று தக்காளிகளை நறுக்கி சேர்க்கவும்.தக்காளி நன்கு வதங்கியவுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.எண்ணெய் பிரிந்து வந்தவுடன் முட்டைகளை சேர்த்து கிளறி காய்ந்த வெந்தயக் கீரை ஒரு தேக்கரண்டியும் மல்லி இலைகளும் தூவி சூடாக பரிமாறினால் சுவையான முட்டை மசாலா ரெடி. கண்டிப்பா இத ட்ரை பண்ணி பாருங்க.




