பிச்சைக்காரன்..!! அருமையான சிறுகதை..!! கண்டிப்பாக அனைவரும் படித்து உணர வேண்டிய பதிவு..!!

ஒரு தெரு வழியே பிச்சைக்காரன் வந்து கொண்டிருந்தான்.  வீட்டுக்குள்ளிருந்து ஒரு அம்மா குழந்தையோடு வந்தாள் குழந்தை கையில் கொடுத்து அரிசியை பிச்சை போட சொன்னார். அதை வாங்கிக் கொண்டு அடுத்த வீட்டுக்கு வந்து நின்றான் பிச்சைக்காரன். அடுத்த வீட்டுப் பெண்ணும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தன் குழந்தையை கூப்பிட்டு அந்த குழந்தை கையால் பிச்சை போட செய்தால் கொஞ்ச காலம் கழித்து இரு பெண்களும் இறந்து மேல் உலகம் போனார்கள். முதல் பெண்ணை சொர்க்கத்திற்கும் இரண்டாவது பெண்ணை நரகத்திற்கும் அனுப்ப சொன்னார் நீதி தேவன். இரண்டாவது பெண் என்னை மட்டும் ஏன் நரகத்திற்கு போகச் சொல்கிறீர்கள். அந்தப் பெண் குழந்தையிடம் கொடுத்து தர்மம் செய்த மாதிரி தானே நானும் செய்தேன். என்று சண்டை போட்டால் அதற்கு நீதி தேவன் சொன்னார் நீங்கள் இருவருமே குழந்தையால் பிச்சை இட்டாலும் உங்கள் இருவரின் நினைவும் வேறு மாதிரி இருந்தது. அந்தப் பெண் குழந்தையால் பிச்சை போட்டு அந்த புண்ணியம் நம் குழந்தைக்கு கிடைக்கட்டுமே என்று நினைத்தாள். அதனால் அவளுக்கு சொர்க்கம் ஆனால் நீ உன் கையால் பிச்சை போட்டால் அதிக அரிசி போய்விடுமே என்று குழந்தை கையால் பிச்சை போட வைத்தாய். உன் கெட்ட எண்ணம் காரணமாகத்தான் உனக்கு புண்ணியம் கிடைக்கவில்லை என்று கூறினார்.

Read Previous

பெண்களே உங்களுக்கும் உதட்டுக்கு மேல் ஆண்களைப் போல மீசை முடி முளைக்கிறதா..?? அதற்கான தீர்வு தான் இது..!!

Read Next

நரி கற்றுக் கொடுத்த பாடம்..!! சிங்கமாக இருக்க வேண்டுமா.. நரியாக இருக்க வேண்டுமா.. என்று நீங்களே பதிவைப் படித்து முடிவு செய்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular