ஐபிஎல் போட்டிகள் சூடு பிடித்து வரும் தருணத்தில் அனைத்து அணிகளும் தங்களது பங்களிப்பை பலமாக கொடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை தலா ஐந்து கோப்பைகளை வென்ற சென்னை மற்றும் மும்பை அணி பரிதாபமான நிலையிலேயே உள்ளது. புள்ளி பட்டியலில் கீழே உள்ள இந்த இரண்டு அணிகள் அடுத்து என்ன செய்வார்கள் என்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இன்று மாலை 3:30 மணியளவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதவிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலமாக தயாராகி வருகிறது. மேலும் சென்னையில் நடக்கும் இந்த போட்டியை பற்றி ஒரு முக்கிய அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. அதாவது சென்ற போட்டியில் சென்னை அணியின் கேப்டனான ருத்ராஜ் ஜெயக்குவாடுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனால் இந்த போட்டியில் அவர் விளையாடுவாரா என்று தெரியவில்லை. நேற்று பேட்டி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் கோச் மைக்கேல் ஹசி ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளார். அதாவது இன்று ருத்ராஜ் விளையாடவில்லை என்றால் சென்னை அணியின் இளம் விக்கெட் கீப்பர் அதாவது தோனி அவர்கள் கேப்டனாக இந்த ஒரு போட்டியில் மட்டும் பங்கேற்பார் என கூறியுள்ளார். ஆனால் அது நிச்சயம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.




