சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரைக்கும் பொடி இட்லி என்றால் யாருக்குதான் பிடிக்காது அனைவருக்கும் மிகவும் பிடித்த இந்த பொடி இட்லி எப்படி செய்வது என்பதை பற்றி தற்போது நாம் பார்க்கலாம்.
பொடி இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி – 4
இட்லி பொடி – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
தேவைக்கேற்ப.
தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்.
செய்முறை
முதலில் இட்லியை கட் செய்யவும்
பின் கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து இட்லி மற்றும் இட்லி பொடி சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.
தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்கவும்.இப்போது சுவையான பொடி இட்லி தயார்.




