வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்..!! அதனால் எத்தனை பாதிப்புகள் என்று உங்களுக்கு தெரியுமா..!!

கோடை வெயில் இப்பொழுது அதிகமாக இருந்து வருகிறது. இதனால் தொண்டைக்கு இதமாக குளிர்சாதன பொருட்களை சாப்பிடுவது நமது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் பல பேர் குளிர்ந்து நீரை குடித்து வருவார்கள். அப்படி குடிப்பது நல்லதா இல்லை கெட்டதா என்று இந்த பதிவில் காண்போம்.

வெயில் காலங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதனால் அடிக்கடி தாகம் எடுக்கும். அப்போது குளிர்ந்த நீரை சிறிது அளவு குடிக்கலாம். ஆனால் அதை அதிக குளிர்ச்சியில் குடிக்கக் கூடாது. அப்படி குடித்து வந்தால் உடலில் பலவிதமான நோய்களும் முளைக்கு ஆபத்தும் நேரிடும். குளிர்ந்த நீரை தினமும் குடித்து வந்தால் சளி தொண்டை வலி, மூக்கடைப்பு தொண்டையில் புண் போன்ற பிரச்சினைகள் வரும். அதுமட்டுமில்லாமல் இரத்த ஓட்டத்தின் வேகத்தை குறைத்து விடும். அதன் காரணமாக மாரடைப்பு போன்ற இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கூட வரலாம்.

மேலும் அதிக குளிர்ச்சியில் தண்ணீரை குடிக்கின்ற போது பற்கள் ஈறுகள் வீக்கம் அடையலாம். இதன் காரணமாக பல்வலி ஈறுகளில் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு நெஞ்செரிச்சல் அல்சர் போன்ற பாதிப்புகள் வர நிறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும் மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் அதிகமாக ஏற்படும். அதுமட்டுமில்லாமல் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதால் மூளைக்கு இரத்த  உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆகையால் குளிர்ந்து நீரை குடிப்பதிலிருந்து நாம் வெளிவந்து நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

Read Previous

அர்ச்சனை செய்வதற்கு முன்பு தட்டை நீட்டி தொட்டு கும்பிட சொல்வது ஏன் தெரியுமா..??

Read Next

பொடி இட்லி எப்படி செய்வது..?? பொடி இட்லி பிரியர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular