அனைத்து இல்லத்தரசிகளுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டு வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்து தங்களுடைய இல்லத்தை கோயிலாக மாற்றும் இல்லத்தரசிகளுக்கு ஓய்வே கிடையாது…

ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் சமைத்தல், வீட்டை சுத்தம் செய்தல், குழந்தைகளை பராமரித்தல் போன்ற அனைத்து வேலைகளையும் கணவரோ அல்லது பிள்ளைகளோ பொறுப்பேற்று இல்லத்தரசிகளுக்கு ஓய்வு கொடுப்பது சிறப்பாக இருக்கும்.

இல்லத்தரசி தினம் என்பது நம்முடைய அம்மாக்கள், மனைவியர் மற்றும் சகோதரிகள் என்று வீட்டின் முதுகெலும்பாக விளங்கும் அனைவரையும் நேசிக்கவும், மதிக்கவும், வீட்டை ஒரு இனிய இல்லமாக மாற்றி
குடும்பம் என்ற வண்டியின் அச்சாணியாகத் திகழும் இல்லத்தரசிகள் வீட்டு வேலை, வெளி வேலை என அனைத்தையும் அசால்ட்டாக செய்து சம்பளம் எதுவும் இல்லாமல் குடும்ப நலன் கருதி வீட்டில் உள்ளவர்களின் சந்தோஷத்திற்காக உழைக்கும் இல்லத்தரசிகளை பாராட்டத்தான் வேண்டும்.

குழந்தைகளை வளர்ப்பது, வீட்டிலுள்ள முதியோரை பேணுவது, கணவருக்கும் உறவினர்களுக்கும் தேவையானதை செய்து கொடுப்பது, முக்கியமாக தினம் தினம் உணவு தயாரிப்பது என்று 24/7 வேலைகள் செய்து சகலகலாவல்லியாகத் திகழும் இல்லத்தரசிகளின் அர்ப்பணிப்பை போற்றுவதும் பாராட்டுவதும் அவசியம்.

ஓய்வு வேலைக்கு செல்பவர்களுக்கு
ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் ஓய்வு,
வேலைக்கு செல்லாத
இல்லத்தரசிக்கு அந்த ஒருநாள்
ஓய்வு கூட கிடைப்பதில்லை.

Read Previous

தவறுதலாக கூட வீட்டில் வைக்க கூடாத செடிகள்..!! மீறினால் பணக்கஷ்டத்தை ஏற்படுத்தும்..!!

Read Next

எனக்காக வாழ்ந்த நாட்களை விட என் குடும்பத்துக்காக வாழ்ந்த நாட்கள் தான் அதிகம்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular