வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் எல்லாம் வந்தால் அதிர்ஷ்டமாம்..!! கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே வீட்டிற்குள் ஒரு சில உயிரினங்கள் எல்லாம் வந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். குழந்தை பேரு உண்டாகும் என்று கூறுவார்கள். இந்நிலையில் வீட்டிற்குள் எந்தெந்த உயிரினங்கள் வந்தால் என்னென்ன அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வீட்டிற்குள் சிட்டுக்குருவி வந்தால் சுபகாரியம் நடக்கும். வெட்டுக்கிளி வந்தால் பணம் சேரும். நாய் வந்தால் கண் திருஷ்டி விலகும். அரணை வந்தால் வராகடன் வசூல் ஆகும். பள்ளி வந்தால் குலதெய்வ அருள் உண்டு. செங்குளவி வந்தால் மகிழ்ச்சி உண்டாகும். அணில் வந்தால் சிக்கல்கள் தீரும். புறா வந்தால் பணத்திற்கு பஞ்சமில்லை. தட்டான் வந்தால் நல்ல சக்திகள் உள்ளன என்று அர்த்தம். கிளி வந்தால் எதிர்பாராத நல்லது நடக்கப்போகிறது என்று அர்த்தம். பொன்வண்டு வந்தால் காரிய வெற்றி ஆகும் என்று அர்த்தம். சேவல் வந்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படப்போகிறது என்று அர்த்தம். பட்டாம்பூச்சி வந்தால் முன்னோர்கள் வருகிறார்கள் என்று அர்த்தம். ஆந்தை வந்தால் லட்சுமி தேவியின் அருள் உண்டு என்று அர்த்தம். செங்குளவி கூடு கட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம். பசுமாடு வீட்டிற்கு வந்தால் தெய்வீக அருள் உள்ளது என்று அர்த்தம். காகம் வீட்டிற்கு வந்தால் முன்னோர்கள் ஆசை உண்டு என்பது அர்த்தம். பறவை இனம் கூடு கட்டினால் மன அமைதி நிலவும் என்று அர்த்தம். மயில் கழுகு வீட்டிற்கு வருவது மிக மிக அரிது வந்தால் மிகவும் அதிர்ஷ்டத்தை தரும்.



