சனிபகவான் தாக்கத்திலிருந்து விடுபட நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?? கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
சனிபகவான் தாக்கத்திலிருந்து விடுபட நாம் சனிக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று கோவிலில் இதையெல்லாம் செய்ய வேண்டும். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சனிபகவானுக்கு கோவிலில் எள் தீபம் ஏற்ற வேண்டும். எள் தீபம் ஏற்றிவிட்டு ஓம் சனீஸ்வராய நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபாடு செய்ய வேண்டும். அது மட்டும் இன்றி கோவிலில் இரும்பால் ஆன விலக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் போடுவது அவசியம். சனிபகவான் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது மற்றும் நவக்கிரகத்தை சுற்றி வந்து கோளறு பதிகம் படிப்பது அல்லது கேட்பது இவை எல்லாம் செய்ய வேண்டும். திருமாலை துளசி மற்றும் மல்லிகை மற்றும் தாமரைப்பூ கொண்டு தரிசிப்பது நல்ல பலனை தரும். சிவனை வன்னி மர இலை கருங்குவளை மலர்களைக் கொண்டு தரிசிப்பது நல்ல நல்ல பலனை தரும். திங்கட்கிழமைகளில் சிவாலயங்களில் ஈசனுக்கு பாலாபிஷேகம் செய்வது நல்ல பலனைத் தரும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை வட மாலை இட்டு தரிசிப்பது நல்ல பலனை தரும். விநாயகரை மூன்று முறை வலம் வந்து ஒரு கைப்பிடி பச்சரிசி மாவை எறும்பு புற்றிற்கு வைப்பது நல்ல பலன் தரும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது.



