நமது உடலில் மிகவும் முக்கியமாக கருதப்படும் ஒரு உறுப்பு தான் கண். இதன் ஆரோக்கியத்தை நாம் எப்போதும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் இப்போது இருக்கும் சூழலில் அனைவரும் கம்ப்யூட்டரின் முன் உட்காந்து வேலை பார்க்கிறார்கள். இதன் காரணமாக நமது கண் சூடாகி பார்வை குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதை தடுப்பதற்காக நமது உணவில் ஒரு சிலதை சேர்த்துக் கொள்வது அவசியம். சுழற்சி முறையில் முருங்கைக்கீரை பண்ணை கீரை கருவேப்பிலை சிறுகீரை வெந்தயக்கீரை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதைப் போன்ற கேரட் பப்பாளி மீன் முட்டை பாதாம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பொன்னாங்கண்ணி கீரையை புளி சேர்க்காமல் சாப்பிடுவது நல்லதாகும். கண் எரிச்சல் அதிகமாக இருந்தால் இரவில் தூங்குவதற்கு முன்பு இரண்டு உள்ளங்கால்கள் நடுவே பசு நெய் தேய்த்து உறங்கலாம். இதையெல்லாம் செய்தால் உங்கள் கண் ஆரோக்கியமாக இருக்கும்.




