கோடை வெயில் மிக அதிகமாக தனது தாக்கத்தை வெளிப்படுத்துகிறது என்று நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இதனால் மக்கள் வெளியே செல்வது மட்டுமில்லாமல் வீட்டுக்குள்ளே இருப்பதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் இங்கு பலர் ஏசி மற்றும் ஏர் கூலர்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு வரும் கட்டணமும் மிகவும் அதிகமாக இருக்கிறது. இப்போது அதற்கு ஒரு புதிய தீர்வு வெளிவந்துள்ளது.
அமெரிக்காவின் Purdue பல்கலைக்கழகம் தனது விஞ்ஞானிகளை வைத்து தூய வெள்ளை நிற பெயிண்டை உருவாக்கி இருக்கிறது. இதனால் 98.1% சூரிய ஒளியை பிரதிபலிக்க முடியும். பருவநிலை மாற்றம் ஆற்றல் சேமிப்பிற்கான தீர்வாக இது கருதப்படுகிறது.
இந்த பெயிண்டை பூசுவதன் மூலம் மின்சாரம் இல்லாமலேயே அறையின் வெப்பநிலையை 8°F ஆக நம்மால் சுலபமாகவே குறைக்க முடியும். புவி வெப்பமயமாதலை தடுக்க இது ஒரு சிறந்த கண்டுபிடிப்பாக அமைந்திருக்கிறது.




