அட்சயத் திருதியை நாளன்று திருமணம் ஆன பெண்களாகிய நாம் செய்ய வேண்டியவை.. கண்டிப்பா இதையெல்லாம் பாலோ பண்ணி பாருங்க..
தலைக் குளித்து, மஞ்சள் நிற சேலையை உடுத்தி, தலை நிறைய மல்லிகைப் பூ முடித்து, வகிடு நிறைய குங்குமமும் , நெற்றி நிறையப் பொட்டும் , இரண்டு கைகள் நிறைய கண்ணாடி வளையல்களும், கழுத்தை அலங்கரிக்க நகைகளும் இட்டு, பின்பு தாலிக்கு மஞ்சள் குங்குமம் இட்டு வீட்டில் விளக்கேற்றி அன்று வாங்கி வரும் பச்சரிசி, உப்பு, வெல்லம், மஞ்சள், தாழம்பூ குங்குமம் நெய் மற்றும் மல்லிகைப் பூ இட்டு பூஜை செய்து வழிப்பட்டு ஐந்து சுமங்கலிப் பெண்களுக்கு தாலி மஞ்சள் குங்குமம் சேர்த்து வழங்கினால் . சகல செளபாக்கியங்களும் உண்டாகும். உங்களின் கணவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.




