குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். அதை வைத்து எதை செய்து கொடுத்தாலும் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி இன்று சாக்லேட் புட்டிங் எப்படி செய்வது என்று தெளிவாக இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:
பால் – 1½ கப்
சர்க்கரை 6 டேபிள் ஸ்பூன்
டேபிள் ஸ்பூன் சோளமாவு – 2 டேபிள் ஸ்பூன்
கொக்கோ பவுடர் – ¼ கப்
வெண்ணிலா எசன்ஸ் – ½ டீஸ்பூன்
துருவிய சாக்லேட் தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தை எடுத்து சர்க்கரை கொக்கோ பவுடர் சோள மாவு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். அதில் பாலை கொஞ்சம் ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கலக்க வேண்டும்.
அந்தக் கலவையை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கெட்டியாகும் வரை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். கெட்டியான பிறகு வெண்ணிலா எசன்ஸ் சிறிது ஊற்றி கிளறி இறக்கி வைத்து விடுங்கள்.
அதனை சிறிய கப்புகளில் போட்டு குளிர்சாதன பெட்டியில் சிறிது நேரம் வைக்கவும். அது நன்றாக செட் ஆனதும் சாக்லேட்டை துருவி அதன் மேல் போடவும். அவ்வளவுதான் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் புட்டிங் தயார்.




