கடலூர் அடுத்த நெய்வேலியில் உள்ள என்எல்சியின் 2-வது அனல்மின் நிலையத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அனல்மின் நிலைய விரிவாக்கத்தின்போது மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு பல மணி நேரமாக கொழுந்துவிட்டு எரியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக தகவல் வெளியாகியுள்ளது.




