ஊற வைத்த வெந்தயத்தை உண்பதால் உண்டாகும் அற்புத பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

ஊற வைத்த வெந்தயத்தை உண்பதால் உண்டாகும் அற்புத பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

வெந்தய விதைகள் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கவும் இது உதவுகிறது மேலும் அது மட்டும் இன்றி இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. வெந்தய விதைகள் மாதவிடாய் வலிக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது ஊறவைத்த வெந்தய விதைகளை சாப்பிட்டால் நல்ல மாற்றம் கிடைக்கும் கபம் அதிகமாக உள்ளவர்கள் வெந்தயத்தை ஊற வைத்தோ அல்லது முழு தானியமாகவோ பயன்படுத்தலாம். பித்த பிரச்சனை உடையவர்கள் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து தண்ணீர் குடிக்கலாம் இது வயிற்றில் இருக்கும்அமிலத்தன்மையை போக்க உதவும் நெஞ்செரிச்சல் போன்ற அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் இரவில் சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல மாற்றம் உண்டாகும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் ஊறவைத்த வெந்தயம் மற்றும் அதன் தண்ணீரை சாப்பிட வேண்டும் இப்படி சாப்பிட பிடிக்காதவர்கள் பருப்பு மற்றும் கறிகளில் சேர்த்து சாப்பிடலாம். இதனை 21 நாட்களுக்கு உட்கொண்டு வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

Read Previous

பீர்க்கங்காயில் இத்தனை நன்மைகள் உள்ளதா..‌?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Read Next

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும்..!! ரூ.58,100/- வரை மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular