Oplus_131072
பூண்டு – வெங்காய தொக்கு செய்வது எப்படி …
தேவையான பொருட்கள் :::
உரித்த பூண்டு – 200 கிராம்
சின்ன வெங்காயம் – ஒரு கிலோ மிளகாய்த்தூள் – 50 கிராம்
புளி – சாத்துகுடி அளவு
சீரகம் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
கடுகுப்பொடி – ஒரு டேபிள்ஸ்பூன் வினிகர் – 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு….
செய்முறை:
பூண்டுடன் வெங்காயத்தை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து, கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் தாளிக்கவும். அரைத்து வைத்திருக்கும் பூண்டு – வெங்காய விழுதை அதில் சேர்த்து வதக்கி, புளிக் கரைசலை விடவும். நன்றாகக் கெட்டி பதத்தில் வந்ததும்… உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி, ஆற வைத்து, கடுகுப்பொடி, வினிகர் சேர்த்துக் கிளறவும்….



