Oplus_131072
கருவுற்றிருந்த ஒரு மனைவி தன் கணவன் கிட்ட வந்து ஆமா உங்களுக்கு என்ன குழந்தை வேண்டும் ! என்று கேட்க! ஆணா இல்லை பெண்ணா!
கணவன் – நமக்கு ஆண் குழந்தை பிறந்தால் நான் அவனுக்கு கணிதம் சொல்லி கொடுப்பேன்!, நாங்கள் சேர்ந்து விளையாடுவோம், ஒன்றாக மீன் பிடிக்க செல்வோம்.
மனைவி – அப்ப பெண்! குழந்தை பிறந்தால் என்ன செய்வீர்கள்!
கணவன் – பெண் குழந்தை பிறந்தால் நான் அவளுக்கு சொல்லித்தர வேண்டியது இல்லை, அவள் தான் எனக்கு உடை எப்படி உடுத்துவது, எப்படி சாப்பிடுவது, எதை பேசுவது எதை பேச கூடாது என்று! உண்மையில் அவள் எனக்கு இரண்டாவது தாயாக மாறி போவாள்! நான் எதுவும் சிறந்த விடயங்களை அவளுக்கு செய்யவில்லையென்றாலும் கூட என்னை அவள் ஒரு ஹீரோவாக பார்ப்பாள். எவ்வளவு வயதானாலும் அவள் தன்னை தன் தந்தை ஒரு பொம்மை போல கொஞ்ச வேண்டும் என்று விருப்பப்படுவாள்.
என்னை யாராவது வார்த்தைகளால் காயப்படித்தினால் எனக்காக அவள் சண்டையிடுவாள். அந்த நபரை அவள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாள்.
மனைவி – அப்ப உங்க பெண் செய்யும் எல்லா செயல்களையும் உங்க பையன் செய்ய மாட்டான் என்று சொல்ல வரீங்க!
கணவன் – அப்படி சொல்லவில்லை! மகனும் அதையே செய்வான் ஆனால் ஒன்று ஒன்றாக கற்று கொண்டு செய்வான். ஆனால் பெண் பிள்ளைகள் அப்படி இல்லை! அவர்கள் பிறக்கும் போதே அந்த தகுதிகளை கொண்டு பிறக்கிறார்கள்!
ஒரு மகளின் தந்தை என்பது எந்த ஒரு தந்தைக்கும் மிகப்பெரிய பெருமை!
மனைவி – ஆனால் அவள் பையனை போல் கடைசி வரை நம்முடன் இருக்க மாட்டாள்!
கணவன் – அவள் வீட்டை விட்டு போனாலும் நாம் என்றும் அவள் இதயத்தில் தான் இருப்போம். மகள்கள் எப்பொழுதும் அப்பாவின் தேவதைகள் . என்றும் குறையாத அன்புடன் அவர்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் பிறக்கிறார்கள்!
சமர்ப்பணம் – மகளை பெற்ற எல்லா அதிர்ஷ்ட க்கார தந்தைகளுக்கும்!



