நாம் வாங்கும் மளிகை பொருட்களில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா..?? இந்தப் பதிவை அனைவரும் கட்டாயம் படிக்கவும்..!!

மளிகை பொருட்களில் மருந்துகள்…

விரலி மஞ்சளைப் பொடித்து பாலில் ஒரு ஸ்பூன் பொடி
போட்டு, பனங்கற்கண்டு கலந்து, கொதிக்கவிட்டு
குடித்தால், வறட்டு இருமல் தீரும்.

சீரகத்தை தேங்காய்ப் பால் விட்டு அரைத்து, வெயில்
காலத்தில் வரும் கொப்புளங்களில் தடவினால் சீக்கிரம்
ஆறிவிடும்.

மிளகு, துளசி இலவங்கம் இவற்றை அரைத்து பற்களில்
தேய்த்து வந்தால் பல் வலி தீரும்.

கடுகு எண்ணெயுடன் சிறிது உப்பு சேர்த்து வந்தால்,
பற்கள் ஆடாமல் உறுதியாக இருக்கும்.

சுக்குப்பொடியை , சாம்பார், புளியோதரை, அடை,
போன்றவற்றில் சேர்த்து சாப்பிட, உணவு ஜீரணமாகும்.
வாய்வுத் தொல்லை வராது ‌

வாழைப்பழத்தில் சீரகத்தைத் தூவி சாப்பிட மூலநோய்
தீரும்.

பருப்புடன் பசலைக் கீரை சேர்த்து கூட்டு செய்து சீரகம்
தாளித்து சாப்பிட்டால் பசியை தூண்டும், மலச்சிக்கல்
தீரும்.

ஓமத்தை பொடித்து மெல்லிய துணியில் சிறு
மூட்டையாக கட்டி, முகர்ந்தால் ஜலதோஷம்,
மூக்கடைப்பு நீங்கும்.

நான்கு, ஐந்து பாதாம் பருப்புடன் ஆறு, ஏழு மிளகைக்
கலந்து மென்று தின்றால், நரம்புத் தளர்ச்சி நோய் தீரும்.

மிளகுத்தூளுடன் சுக்குப்பொடி, பனங்கற்கண்டு,
கலந்த பசும்பால் குடித்து வர தொண்டை வலி காய்ச்சல்
தீரும்.

கடுகு பசியை தூண்டும். உணவு எளிதில் ஜீரணமாக
உதவுகிறது.

Read Previous

சிறிதளவு கொள்ளு உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular