வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமென்றால்.. கண்டிப்பா இதையெல்லாம் பண்ணாதீங்க..!!

 

 

அன்றாட வாழ்க்கையில் அனைவரும் பொதுவாகவே ஆசைப்படுவது என்னவென்றால், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் போதுமான அளவு செல்வ செழிப்பையும் தான். இதற்காகத்தான், ஓடி ஓடி கடினமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில், எவ்வளவுதான் ஓடி ஓடி உழைத்தாலும் ஒரு சில நேரங்களில் எதிர்மறையான நிகழ்வுகள் நடந்து வீட்டில் வறுமை ஏற்படுகிறது.

வீட்டில் பண வரவு அதிகரித்து நம் உடைய நிலை மேம்பட வீட்டில் மாலை நேரங்களில் இதையெல்லாம் கண்டிப்பாக செய்யவே கூடாது. அது என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். ஒரு சிலர் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் ஒரு சில தவறுகள் லக்ஷ்மி தேவிக்கு அதிருப்தியை ஏற்படுத்தும். இதனால் தான், வீட்டில் பண சிக்கல் ஏற்படும்.

இந்நிலையில், நம் வீட்டில் மாலை நேரத்தில் இதை எல்லாம் செய்யாமல் இருந்தாலே நம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும். குறிப்பாக மாலையில் சூரிய மறைவிற்குப் பிறகு இதை எல்லாம் செய்யவே கூடாது. சூரிய மறைவிற்குப் பிறகு தூங்குவதை நாம் தடுக்க வேண்டும். குறிப்பாக மாலை நேரத்தில் பூஜை செய்யும் நேரமாக கருதப்படும் போது, நாம் அப்போது தூங்கிக் கொண்டிருந்தால் லட்சுமி தேவியின் அதிருப்தி ஏற்பட்டு வீட்டில் வறுமை ஏற்படும். மற்றும் மாலை நேரத்தில் சூரியன் மறைவிற்குப் பிறகு துணி துவைக்க கூடாது. இது வீட்டில் உள்ள எதிர்மறையை அதிகரிக்கிறது. குறிப்பாக மாலையில் லட்சுமி தேவி வீட்டிற்கு வருவார் அந்த நேரத்தில் நம் வீட்டை சுத்தம் செய்து தொலைத்துக் கொண்டு இருந்தால் மகாலட்சுமி என் வாசமே நம் வீட்டிற்கு கிடைக்காமல் போய்விடும். மேலும், மாலையில் பண பரிவர்த்தனை செய்யக்கூடாது. அப்படி செய்தால் செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மி மாதா கோபமடைந்து வீட்டில் இருந்து வெளியேறுவார் என்பது ஐதீகம். இவை எல்லாவற்றையும் நாம் மாலை நேரத்தில் செய்வதை தவிர்த்தாலே போதும் நாம் வீட்டில் பண வரவு அதிகரித்து செல்வ செழிப்பு கிடைக்கும்.

Read Previous

பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!! கட்டாயம் படிங்க..!!

Read Next

மனிதர்களை பயன்படுத்துகிறோம்..!! பொருட்களை நேசிக்கிறோம்..!! எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோம்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular