மறுமணம் பற்றிய பதிவு..!! கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

மறுமணம்…

ஆணிற்கொரு மறுமணம் என்றால்..
வயதில்லை எந்த ஒரு தடையில்லை. சமுதாய பிரச்சனையும் இல்லை.
இறந்த மனைவியின் நினைவில்லை அவள்
இல்லை யென்ற வேதனை இல்லை…பெண்ணிற்கு மறுமணம் என்றால்.. மட்டும்
இறந்தவன் நினைவு வந்து விடும் அவன்
குடும்பம் தழைக்க ஓர் வாரிசு இல்லை யென்ற வருத்தம் வந்து விடும்.. சமூக கௌரவம் வந்துவிடும்…

மூன்று மாத வாழ்க்கையில்
மூளைச்சாவில் கணவன் போனால்..
மூலையில் அமரவைத்து..
மூக்குச் சிந்தி செல்லும் கூட்டம் சொல்லுது..
வாரிசு இல்லை.. இறந்தவன் நினைவின்றி உடலுக்காக அடுத்தவனை கைப்பிடிக்கிறாளென்று…பிள்ளையொன்று பிறந்து விட்டால்
பிரிதொரு வாழ்க்கை அமைக்க நினைக்குமோ இக்கூட்டம் .
பிள்ளைக்காக வாழ்ந்திடு பிள்ளைக்காக வாழ்ந்திடு என்றுச் சொல்லி தங்கள் மகிழ்வைக் கூட தளர்த்திடாது நகர்ந்துச் செல்லும் கூட்டம்.. சொல்லுது இறந்தவன் நினைவு.அவளிற்கு இல்லையென்று.இறந்தவனை மட்டுமே நினைந்திருந்தால்
இவள் வாழ்க்கை மீண்டிடுமோ…
இல்லை குழந்தையொன்று தான் பிறந்திட்டால்… குடும்பமாக ஆகிடுமோ..??கண்ணீரில் கரைந்தபடி காலமெல்லாம் இவள் வாழ கலகலவென சிரித்தபடி
செல்லும் கூட்டம்… அடுத்த சோலி பார்க்க
மூலையில் அமர்ந்தவள் மீண்டுமொரு
மாலையேந்தினாள் மட்டும்
மூலைக்கு மூலை நின்று பேசுது கதை..இல்லாமல் போனவனுக்காக இவள்
இடிவிழுந்த மரமாகா பட்டுப் போக வேண்டுமோ..?? துளிர்த்திடல் ஆகாதோ..??
இறந்தவன் குலம் வாரிசற்று போனதற்காய்.. இவள் குலம் தழைக்க கூடாதோ ..?? பேசும்… மூடர் கூட்டம்…

வாரிசுக்காக பெண்களின் வாழ்க்கையை பாழாக்காது.. வாழவையுங்கள் மீண்டும் வாழ்வழித்து..!! வாழச் சென்றால் வாழ்த்திடுங்கள் வழி மறைக்காது..!!

Read Previous

அவசரக்காரன்- ஒரு நகைச்சுவை கதை..!! படித்ததில் மிகவும் ரசித்தது..!!

Read Next

பிள்ளைகளை அடித்து புரிய வைப்பதை விட.. அன்பாக கூறி புரிய வைக்கும்போது நிகழும் மாற்றம் என்ன என்பதை உணர்த்தும் அருமையான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular