பாஜக கூட்டணி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சுமை என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ஜெயலலிதா, “சசிகலா ஊழல் செய்தார்கள் என சிறையில் அடைத்தது பாஜக. அவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. தேர்தலுக்காக கொள்கை வேறு, கூட்டணி வேறு என தலைவர்கள் கூறுவது புது விளக்கமாக உள்ளது” என பேட்டியளித்துள்ளார்.




