வாழ்க்கையை அழகாக்க வேண்டுமா?.. அப்போ இத ஃபாலோ பண்ணுங்க..!!

  • அஞ்சிக்கொண்டும் வாழாதே… கெஞ்சிக்கொண்டும் வாழாதே…உனக்கான வாழ்க்கையை வாழ்!
  • பிரச்சினை என்பது தொலைநோக்கி போலவே…நீ பார்க்கும் பார்வையில்தான் எல்லாம் அடங்கியிருக்கிறது. அதை பெரிதாக நினைத்தால் பெரிதாகத்தான் தோன்றும் சிறியதாக நினைத்தால் பிரச்சினை உனக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது.
  • உணர்ச்சிகள் என்ற ஒன்றை உனக்கு அடக்க தெரிந்தால் வாழ்க்கையில் வரும் அனைத்து கஷ்ட நஷ்டங்களாலும் உன்னை ஒன்றும் செய்துவிட முடியாது.
  • நேரம் வரட்டும் செய்யலாம் என்று காத்திருப்பதும் காலம் வந்தால் எல்லாம் தன்னாலே கிடைக்கப்பெறும் என்ற மூட நம்பிக்கையோடு கனவு காண்பதும் ஒருபோதுமே உன் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல.
  • ஒருவரை கண்டு நன்றாக வாழ்ந்தால் அவர்கள்போல் தான் வாழ வேண்டும் என்று தானே நினைக்கிறார்கள் தவிர, எவரும் அவர்களைப் போலவே நாமும் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இல்லை.
  • அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம். ஆனால், உனக்கென சிறந்த வழியை நீ தேர்ந்தெடுக்கும் வரையிலும் வெற்றி என்பது உனக்கு ஒரு கிடைக்காத பொக்கிஷம்.
  • பட்டை தீட்ட தீட்டதானே தங்கம் உருவாகும். அதுபோலவே வாழ்க்கையின் இன்னல்களை கடந்து வந்தால் மட்டுமே உன் சாதனை இந்த உலகில் நிஜமாகும்.
  • இலட்சியம் என்ற ஒன்று எதுவும் இல்லாதவன் இந்த உலகை ஜெயிக்க தகுதி இல்லாதவன்.
  • வெறும் பெருமைக்காக எதையுமே செய்யாதே உன் மனநிறைவுக்காக உனக்கு பிடித்ததை பெருமையோடு செய்.
  • நீ ஒருவருக்கு ஆயிரம் விதத்தில் உதவியிருக்கலாம். ஆனால், ஒருமுறை அவர் உன்னிடம் கறை கண்டிருப்பின் அந்த கணத்தில் நீ செய்த உதவிகள் அனைத்தையும் மறந்து போவார்கள். இதுதான் உலகம்.
  • அதிர்ஷ்டம் கூட சில சமயம் கிடைக்கும் என்று நினைப்பவன் கையிலே சென்றடையும் எனவே, எதை செய்தாலும் அதன் மீது பற்றாக இரு…துணிந்து நிமிர்ந்து போராடு!
  • வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற சிந்தனை உனக்குள் வந்துவிட்டாலே பொறுப்பு என்பது தன்னாலே அமைந்துவிடுகிறது.
  • வாழ்க்கை தேடல்களுக்கான சிறந்த விடை உன் அனுபவங்களால் உனக்கு கிடைக்கப் பெறும். ஆதலால் எதையும் நேருக்கு நேராக சந்தித்துவிட்டு வெற்றி பெற்றால் ஜெயமாகட்டும் தோல்வியுற்றால் ஒரு சிறந்த அனுபவமாய் அமையட்டும்!
  • தயக்கம் தடைகளை உருவாக்கும். இயக்கம் தடைகளை உடைக்கும்.
  • தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது. கஷ்டத்தை கொடுத்தவனுக்கு கஷ்டத்தை கொடுக்காதே. நீ அனுபவித்ததை தானே அவனும் அனுபவிக்க வேண்டும். விட்டு விடு நண்பா! புரிய முடிந்தால் புரிந்து கொள்ளட்டும்.
  • உனக்கான இலக்கை தொடுவதல்ல வாழ்க்கை. உனக்கான உலகத்தை உருவாக்குவதே வாழ்க்கை!
  • நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும், ஆனால், ஒரே நாளில் மாறிவிடாது.

Read Previous

அந்த கால உறவினர்கள்..!! இந்த கால உறவினர்கள்..!! படித்ததில் பிடித்த பதிவு..!!

Read Next

உங்களைப் பற்றி படியுங்கள்..!! உடனே மனது ஏற்காது தான்..!! ஆனாலும் உண்மை என்றும் உண்மை தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular