சிவங்கங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவன் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 7 வயதான அந்த சிறுவன் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வகுப்பறையில் இருந்தபோது அச்சிறுவனுக்கு தீடீரென வலிப்பு வந்துள்ளது. இதையடுத்து, பள்ளி நிர்வாகம் சிறுவனை சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தது. இந்நிலையில், அந்த சிறுவன் மரணமடைந்ததாக தனியார் பள்ளி நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது.




