ஆமா நீ பெரிய கொடை_வள்ளல் அப்படி என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆமா தானே????
அந்தக் கொடை வள்ளல்கள் யார் என்று கேட்டால் இவர்கள் தான்…
கடையேழு வள்ளல்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்போம். அவர்கள் எந்தெந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியுமா?
1) பேகன் – பழநி (வைகாவி நாடு) மயிலுக்கு போர்வை அளித்தவர்.
2) பாரி – திருப்புத்தூர் (பிரான்மலை எனும் பறம்பு மலை, சிவங்கை மாவட்டம்) முல்லைக் கொடி படர தேர் வழங்கியவர்.
3) காரி – திருக்கோவிலூர் (மலாடு – திருவண்ணாமலை) தன் குதிரையையும் ஏனைய செல்வங்களையும் வாரி வழங்கியவர்.
4) ஆய் – ஆய்குடி பொதிகைமலை. நாகர்கோவில் பகுதி, கன்னியாகுமரி மாவட்டம். நாகம் வழங்கிய அரிய ஆடையை சிவ பெருமானுக்கு அளித்தவர்.
5) அதியமான் – தர்மபுரி (தகடூர்) நீண்ட நாள் வாழக்கூடிய அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவைக்கு கொடுத்தவர்.
6) நள்ளி – கண்டீர நாடு. தன்னை அண்டி வந்தவர்க்கு தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் உதவி செய்தவர்.
7) ஓரி – கொல்லிமலை. விற் போரில் வல்ல ஓரி கொல்லிமலைக் கவிஞர்களுக்கு தன் நாட்டையே பரிசளித்தவர்.




