மனதில் வலிமையான எண்ணங்களை வளர்க்க உதவியாக இருக்கும்..!! படித்ததில் பிடித்த பதிவு..!!

1.உன்னைப் போல் ஒருவனைக் காண்பது என்பது முடியாத ஒன்று.. இருந்தும் நீ ஏன் வேறு ஒருவனை போல் வாழ நினைக்கிறாய்..!

நீ நீயாக இரு உனக்கென ஒரு தனித்துவம் உண்டு. அந்த தனித்துவத்தை எந்த சந்தர்ப்பத்திலும் இழக்காதே.. மற்றவர்களை போல் பிரதிபலிக்க ஒரு போதும் முயலாதே.

உன்னை நீ நேசி. மற்றவர்கள் உன்னை வெறுத்தாலும் உன் தனித்துவத்தை நீ நேசி.

2. அவமானத்திற்கு இரண்டு குணங்கள் உண்டு.

கோழையை தற்கொலை செய்ய வைக்கின்றது.
வீரனை வாழ்ந்து காட்ட வைக்கின்றது.
மற்றவர்களால் நீ அவமானம் செய்யப்படும் போது துவண்டு நின்று விடாதே. உனக்காக தகுதியை உயர்த்துவதற்காக கடுமையாக முயற்சி செய்.. கடுமையாக உழை.. உன்னை அவமானம் செய்தவர்கள் ஒரு நாள் உன் முன் கை கட்டி நிற்பார்கள்.

3. வருமானம் இல்லா வாழ்க்கையை விட தன்மானம் இல்லா வாழ்க்கையே அவமானம்.

உனக்கென ஒரு தன்மானம் எப்போதும் இருக்க வேண்டும். அது மற்றவர்களால் “திமிர்” என பார்க்கப்பட்டாலும் அந்த தன்மானத்தில் இருந்து எப்போதும் விலக்காதே.

வறுமை உன்னை வாட்டினாலும் தன்மானத்தோடு வாழப் பழகிக் கொள். இது உனக்கான மரியாதையை தேடி தரும்.

4. கோபத்தில் எது கிடைத்தாலும் வீசி எறிய எல்லோராலும் முடியும்.. ஆனால் அந்த கோபத்தை வீசி எறிய ஒரு சிலரால் தான் முடிகின்றது.

உன் கோபம் உன்னை கட்டுப்படுத்த ஒரு போதும் அனுமதிக்காதே. கோபத்தை கட்டுப்படுத்த பழகிக் கொள். கோபத்தை எவனொருவனால் கட்டுப்படுத்த முடிகிறதோ அவன் ஒருவனே வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை பெற்றுக் கொள்கிறான்.

5. இவை எப்பொழுதும் ஒரு மனிதனை வாழ வைப்பதில்லை.

நான் என்கின்ற அகம்பாவம்.
அவனா என்கிற பொறாமை.
எனக்கு என்கின்ற பேராசை.
அகம்பாவம், பொறாமை மற்றும் பேராசை இவை மூன்றும் உங்களை தொற்றிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவை மூன்றும் நோய்களை விட மிகவும் ஆபத்தானவை.

6. உன் வாழ்வில் வரும் சிக்கல்களை கடக்கும் போது சிரித்துக் கொண்டே கடக்க முடிந்தால் உலகில் உன்னை விட வலிமையானவர் யாரும் இல்லை.

உலகில் அனைவருக்கும் பிரச்சனைகள் துன்பங்கள் இருக்கின்றன. எப்போதும் சந்தோஷமாக இருப்பவர் இந்த உலகில் யாருமில்லை.

உன் துன்பங்களை நீ கடக்கும் போது சிரித்துக்கொண்டு மன வலிமையோடு கடந்து செல்.

7. மனம் விட்டு பேசுங்கள் அன்பு பெருகும்.

உங்கள் #அன்புக்கு உரியவர்களிடம் உங்கள் ஈகோவை கைவிட்டு மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுங்கள்.

அவர்களுக்கு தெரியாததை அன்பாக புரிய வையுங்கள். அன்பும் பிணைப்பும் பெருகும்.

8. உன்னை நீயே #பலவீனம் என்று எண்ணுவது அறிவீனம்.

நீ ஒரு போதும் பலவீனம் கிடையாது. நீ உன்னை எவ்வாறு எண்ணுகிறாயோ அதுவாகவே மறுக்கிறாய். உன்னை நீ வீரன் வலிமையானவன் என்று எண்ணினால் நீ வலிமையானவன்.

உனக்கு தேவையான #திறமையும் தகுதியும் உனக்குள்ளே இருக்கின்றது. நீ வலிமையானவன்.

9. வாழ்க்கையில் வேகமாக முன்னேறவில்லை என்று வருத்தப்படாதே.

வேகமாக முன்னேறவில்லை என்று வருத்தப்படாதே.. பின் வாங்காமல் செல்கிறாய் என்பதை நினைத்து சந்தோசம் கொள்.

10. வீரன் தோல்வியை கண்டு ஓட மாட்டான்.

கோழை தான் தோல்வியை கண்டு பின் வாங்குவான். வீரன் தோல்வியை கண்டு அச்சம் கொள்வதும் இல்லை பின்வாங்குவதும் இல்லை.

தோல்வி உன்னை துரத்தினால் நீ ஓடிக் கொண்டே இரு நிறுத்தாதே. அது களைப்படைந்து நிற்கும் வரை

Read Previous

ஆமா நீ பெரிய கொடைவள்ளல் அப்படி என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆமா தானே?..

Read Next

ஒரு ஆண் தான் உடன் பழகும் பெண்னிடம் அவளை பிடித்து இருந்தால் அதை எப்படி வெளிப்படுத்துவான்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular