மருத்துவ குணங்கள் கொண்ட இந்த நாய் கடுகு எதற்காக பயன்படுகிறது தெரியுமா?..

நாய் கடுகு செடியின், பூக்கள், விதைகள், மற்றும் இலைகள் அனைத்துமே, மருத்துவம் மற்றும் உணவுக்கு பயன்படுகின்றது. இந்த நாய் கடுகை, நாய்வேளை, மற்றும்  காட்டுகடுகு என்ற பெயரிலும் அழைப்பார்கள்.
நாய் கடுகு செடியின் விதை, காய், பூக்கள், இலைகள், தண்டு, வேர் என்று அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது. இந்த நாய் கடுகு சித்த வைத்தியம், யுனானி மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது
நாய் கடுகு பல நோய்களை குணப்படுத்த பயன்படுகின்றது. நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடு, ஹெல்மாடிக் எதிர்ப்பு செயல்பாடு டயரியல் எதிர்ப்பு, கட்டி எதிர்ப்பு, எமெடிக் எதிர்ப்பு, ஹெபடோ பாதுகாப்பு போன்ற பண்புகளும் இதற்கு உள்ளது.
கல்லீரல் குறித்த அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்த இது ஏற்ற மருந்தாக (பலன்) உள்ளது, குறிப்பாக் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் கல்லீரல்  செயல்பாட்டு குறைகள் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகின்றது
அனைத்து சரும பிரச்சனைகளை போக்க இது உதவும். இதன் இலைகள் பிசுபிருப்பாக இருக்கும். வயிற்று புண், மஞ்சக்காமாலை, சுரம் போன்ற பிரச்சனைகளை  போக்க உதவும்.  இதன் வேர்கள் இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும்.
நாய் கடுகின் இலைகள் காது வலியை போக்க பெரிதும் உதவியாக உள்ளது. காதில் ஏற்படும் வலி, அடைப்பு, சைனசால் ஏற்படும் வலி, போன்ற பல பிரச்சனைகளை இது குணப்படுத்த உதவும்.
நாய் கடுகுப் பொடியை சிறிது எடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து காலை மற்றும் மாலையில் சாப்பிட வேண்டும். இப்படி இரண்டு நாட்கள் சாப்பிட்டால்,  வயிற்றில் இருக்கும் புழுக்கள் வெளியேறும்
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக இரத்த போக்கை சீர் செய்ய இந்த நாய் கடுகு உதவியாக உள்ளது. சிறிது நாய் கடுகை எடுத்து, மிதமாக  வறுத்து, துவையல் செய்து, சுடுசோற்றுடன் சாப்பிட வேண்டும்.

Read Previous

கொடி விவகாரம்.. புதிய திருப்பம்..!! தவெகவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்..!!

Read Next

திருமண வரன் பார்ப்போருக்கான கவனத்திற்கு..!! ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருவருக்குமே..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular