திருமண வரன் பார்ப்போருக்கான கவனத்திற்கு..!! ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருவருக்குமே..!! படித்ததில் பிடித்தது..!!

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருவருக்குமே….

#ஆண்கள்
கேட்க கூடாதாவைகள்.

• வரதட்சணை எவ்வளவு தருவீங்க…?

• எத்தனை பவுன் போடுவிங்க?

• என்ன பைக் அல்லது கார் வாங்கி கொடுப்பீங்க?

• என்ன வீட்டுக்கு தேவையான ஜாமான் வாங்கி தருவீங்க..(சிலர் பேர் உண்டு எங்க வீடு பெரிசு அதனால டிவி 70 இன்ச்சு வாங்கிருங்க, அப்படியே ஏசி இல்லை,

• அப்பறம் மாப்பிள்ளை தொழில் தொடங்கனும் அதற்கு ஒரு பத்து லட்சம் காசு கொடுத்திடுங்க….)
நீங்க திருமணத்திற்கு பொண்ணு கட்ட போறிங்களா?? அல்லது பேங் தொடங்க போறிங்களா????. வீட்டில் உள்ளவர்கள் கேட்க சொன்னால் எடுத்து சொல்லுங்கள்.

இதையெல்லாம் வைத்த என்ன பன்ன போகிறோம். அவர்களிடம் இருந்து நீங்கள் வாங்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் உங்களுடைய தன்மானத்தையும்,கௌரவத்தையும் இழக்கிறீர்கள் என்று அர்த்தம்…

அவர்கள் வீட்டில் அந்த பெண்ணுக்கு பத்து லட்சம் மதிப்பில் தங்கம், வைரம் என பூட்டினாலும், நாம் (ஆண்களாகிய நாம்) ஆயிரம் ரூபாய்க்கு எடுத்துக் கொடுக்கும் நகையைக்கு உண்டான மதிப்பு அதைக்காட்டிலும் பன்மடங்கு உயர்ந்தது என நான் கருதுகிறேன்.

கேட்க வேண்டியவை..

• உங்களுக்கு பிடித்து தானே திருமணத்திற்கு சம்மதம் சொன்னீர்கள். நிறைய பேர் வீட்டில் பெண்களை கேட்பதே இல்லை..

• என்னோட தோழிய இருக்க விருப்பமா..?

• சேலை கட்ட தெரியுமா.. இன்று பல பெண்களுக்கு சேலை கட்ட தெரியவில்லை..

• சமைக்க தெரியுமா..!

• மேற்கொண்டு படிக்க விருப்பமா!

• நல்ல பேசத் தெரியுமா..?
இதைப்போல ஆயிரம் கேள்விகள் கேட்டால் நலம் என நான் கருதுகிறேன்.

#பெண்கள்
கேட்க கூடாதாவைகள்!!

• உங்களோட சம்பளம் எவ்வளவு?

• திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் வருவீங்களா?

• பேங்க அக்கவுண்ட் எவ்வளவு இருப்பு உள்ளது?

• சொத்து எவ்வளவு வரும்?

• வீடு சொந்தமா? வீடு யாரு பெயர்ல இருக்கு!

இதை எல்லாம் பெண் வீட்டார்கள் கேட்பார்கள், கேட்டால் நீங்கள் மாப்பிள்ளையை விரும்பவில்லை. அவர் பெயரில் இருக்கும் சொத்து மற்றும் பணத்தை தான் விரும்புகிறீர்கள்.

உங்கள் மகளின் எதிர்கால வாழ்க்கை பற்றி நீங்கள் சந்தேகிக்கலாம். ஆனால் ஒரு ஆணுடன் நீங்கள் பேசும்பொழுதே தெரிந்துவிடும் இவன் நம்ம பொண்ணுக்கு சரியானவனா இல்லையா என்று.

கேட்வேண்டியவைகள்!!

• நெடுந்தொலைவு பயணம் போகப் புடிக்குமா?(சில பெண்களுக்கு மட்டும் ஊர் சுற்றும் விருப்பம் உண்டு)

• மது, புகை பழக்கம் உண்டா?

• நீங்க வெஜ் இல்ல நான்வெஜ் ஆ.?

• என்னோட தோழனா இருக்க விருப்பமா?

• சமைக்க தெரியுமா… (நிகழ்காலத்தின் டிரெண்டு)

இதைப்போல நிறைய கேள்விகள் கேட்கலாம்….

நிறைவு
அதைவிட்டு விட்டு எதுக்கும் உதவாத சொத்து,பணத்தை இரு வீட்டார்களும் கேட்பது முறைஅல்ல…

இக்காலத்துக்கு பணம் தேவை தான் ஆனால் பணமே வாழ்க்கை அன்று…ஒரு நகரத்தில் மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பவன் தினறுகிறான்.. ஆனால் அதே ஊரில் மாதம் 10 ஆயிரம் வாங்குபவன் சந்தோஷமாய் இருகிறான்.

இந்த பிரபஞ்சத்தில் யார் ஒருவரோக்கு அம்மா அப்பா, நல்ல மனைவி/கணவன் மற்றும் நோயில்லாத வாழ்வு பெறுகிறார்களோ… அவர்களே இவ்வுலக்த்தின் ஆஸ்தியும் அந்தஸ்வும் உள்ளவர்கள்.

Read Previous

மருத்துவ குணங்கள் கொண்ட இந்த நாய் கடுகு எதற்காக பயன்படுகிறது தெரியுமா?..

Read Next

எலும்புகள் பலமில்லாமல் இருக்கிறதா?.. உடனே இந்த உணவை செய்து சாப்பிடுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular