Oplus_131072
பெண் குழந்தைகளை வைத்திருக்கும் தாய் தந்தையருக்கான எச்சரிக்கை!💔
குழந்தைகள் தொடர்பாக மிகவும் அவதானமாக இருங்கள் இல்லாவிட்டால் அது வாழ்நாள் பூராகவும் சில வழிகளையும் சுமைகளையும் உங்களுக்கு தந்து விடும்.
*இரத்த சம்பந்தம் அற்றவர்கள் முத்தமிடுவது அல்லது கட்டிப்பிடிப்பது, தடவுவது போன்ற செயல்களுக்கு இடம் அழிக்காதீர்கள்.
*சம்பந்தம் அற்றவர்கள் வரும்போது குழந்தைகளை அவர்கள் முன் ஆடைகளை மாற்றுகின்ற செயற்பாட்டை செய்யாதீர்கள்.
*யாரும் உங்களுடைய குழந்தையை விளையாட்டுத்தனமாக கூட இது என்னுடைய wife( மனைவி) அல்லது இது என்னுடைய காதலி(Lover) என்று சொல்லுவதற்கு அனுமதிக்க வேண்டாம்.(இது குழந்தைகள் மனதில் ஆழமாக பதிந்து வேறுவகையான சிந்தனைகளை உண்டு பண்ணும்)
*குறிப்பாக வயதடைந்த பாட்டிகள்.
சிறுவயதிலேயே குழந்தைகள் மனதில் திருமண ரீதியான சிந்தனைகளை உருவாக்குவது அதனோடு அவர்களை அவர்கள் இணைத்து திருமண எதிர்காலத்தை குறிப்பிடுவது மிகத் தவறாகும். (குழந்தைகள் மத்தியில் அதிகமாக திருமணம் சம்பந்தமாக பேசுகின்றபொழுது அவர்கள் சிறிய வயதில் பாலியல் தொடர்பான தேடலுக்கும், சிந்தனைக்கும் உள்வாங்கப்படுகின்றார்கள்)
*பெண்குழந்தைகள் நண்பர்களை தெரிவு செய்கின்றபொழுது அவர்கள் தொடர்பாக சற்று ஆராய்ந்து அவர்களை தொடர்பில் வைத்துக் கொள்ள அனுமதியுங்கள்.
(உங்களுடைய குழந்தை நன்றாக இருந்தபோதிலும் மற்ற குழந்தைகள் அவர்களுக்கு கிடைத்த பாலியல் அனுபவங்களை அவரிடம் பகிர்ந்து கொள்ள கூடும்)
*குறிப்பாக குழந்தைகளுக்கு internet தொடர்பான அறிவினை ஊட்டுதல் மற்றும் அதில் உள்ள முறையற்ற website ஊடாக பாலியல் ரீதியான சிந்தனைகள் யோசனைகள் அதிகரிக்க வாய்ப்புண்டு.
*அதிக கூட்டங்கள் இருக்கின்ற பகுதிகளில் எவ்வாறு ஆடைகளை மரியாதையாக அமைத்துக்கொள்வது தொடர்பாகவும் அவர்களுக்கு பயிற்சி அழியுங்கள்.
*அவர்களே தங்களைத் தாங்களே சுத்தம் செய்து கொள்வதற்கு பயிற்சி அளியுங்கள் அதனை யாரும் செய்வதற்கு அனுமதி அழிக்காதீர்கள்.( வேலைக்காரி ect .. அனுமதிக்க வேண்டாம்)
*வேறு நபர்களாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவர்களுடைய தொடுகைகளை Good touch, bad touch முறைகளை அவர்களுக்குத் தெளிவாக பயிற்சி அளியுங்கள்.
*பெண் குழந்தைகள் யாரேனும் பற்றி முறைப்பாடுகள் செய்தால் அதற்கு அமைதியாக இருந்துவிடாமல். அதற்கு நடவடிக்கை எடுங்கள்.
இதில் மிகவும் சுருக்கமாக ஒரு சில விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன
இதற்கும் அப்பால் இன்னும் பல விடயங்களில் நாம் அவதானமாகவும் கவனமாகவும் பெண் பிள்ளைகள் தொடர்பில் இருக்க வேண்டும்.




