கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில், பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து கேட் கீப்பர் உட்பட 11 பேரிடம் இன்று (ஜூலை 10) தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி ரயில்வே கோட்ட மூத்த துணை பாதுகாப்பு அதிகாரி மகேஸ்குமார் தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து நடப்பதற்கு முன் கொடுக்கப்பட்ட தகவல்கள், விபத்து நடந்ததும் வந்த முதல் தகவல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.




