உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் அருகே, 45 வயது நபருக்கு 16 வயதில் மகள் உள்ளார். கடந்த 9ஆம் தேதி இரவு, அந்நபர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுனி, தந்தை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது தாயாரிடம் கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மகளை பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.




