சென்னை ஏழுகிணறு பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த 3 இளைஞர்களை போலீசார் மடக்கினர். அவர்களது பைகளில் சோதனை செய்ததில், விற்பனைக்காக உயர்ரக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, சினிமா உதவி இயக்குநர் ஸ்ரீபிரேம்குமார் (32), அவர்களது நண்பர்கள் ராஜன் (36), அலெக்ஸ் சந்தோஷ் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.




