ஜப்பானில் இருந்து ஒருத்தர் நம்ம ஊருக்கு வந்து இருந்தாராம்.
நம்ம ஊர்க்காரர் ஒருத்தர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தார்.
” உங்களுக்கு எத்தனை குழந்தைகள்” அவர் விசாரித்தார்.
” ஒரே ஒரு பெண் குழந்தைதான் “
என்று நம்மூர்காரர் சொல்லி உள்ளார்.
” வயசு என்ன?” என்று ஜப்பான் .
3 வயசு என்றார் இவர்
” குழந்தையை பார்க்கணுமே”! என்று ஜப்பான் கார் கேட்டார்.
” பள்ளிக்கூடம் போய் இருக்கா” என்றார் நம்ம ஊர்க்காரர்.
ஜப்பான்காரர் உடனே மலைத்துப்
போய்விட்டாராம்.
“என்னது
மூன்று வயதிலேயே பள்ளிக்கூடம் அனுப்பி விட்டீர்களா” என்று ஆச்சரியமாக கேட்டார் ஜப்பான்காரர் .
“ஆமா அவ எல்கேஜி படிக்கிறாள்”.
” அது சரி உங்க ஜப்பான் நாட்டிலே இந்த வயசுல பள்ளிக்கூடம் அனுப்ப மாட்டீர்களா”
என்று நம்ம ஊர்க்காரர் விசாரித்தார்
” எங்க ஊர்ல எல்லாம் ஏழு அல்லது எட்டு வயசுக்கு மேலே தான் பள்ளிக்கூடம் அனுப்புவோம்” என்று அவர் சொன்னார்..
இப்போது நம்ம ஊருகாரருக்கு
ஆச்சரியம்..
இதுக்கு அவர் விளக்கமாக சொன்னார் .
*சின்னக் குழந்தைகளின் மனசு பக்குவப்பட்ட பிறகுதான் பள்ளிக்கூடத்திற்கு எங்க நாட்டில் அனுப்புவோம்*
இந்த வயசிலே அதுக்கு பள்ளிக்கூடம் போகிற ஆர்வம் அப்போதுதான் உண்டாகும்.
ஏழு வயது வரைக்கும் அந்த பிஞ்சு மனசு அன்பையும் நட்பையும் பிற
மனித அறிமுகங்களையும் தான் அதிகமாக எதிர்பார்க்கும் .
ஒரு குழந்தை எவ்வளவு நேரம் அவங்க அம்மா கூட இருக்கு..
அதே மாதிரி எவ்வளவு நேரம் வீட்டில் உள்ள மற்றவர்கள் …
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்…
இவங்களோட எங்க குழந்தை செலவழிக்குது.
என்பதைப் பொறுத்து தான் அந்தக் குழந்தை உடைய மனசு
விசாலமடைகிறதாம்.!
அறிவுலே அந்த வயசுக்கு ஏற்ற முதிர்ச்சி ஏற்படுது!.
வீட்டிலேயே இருக்கக்கூடிய குழந்தை,
அந்த வயசுக்குள்ள தன் வீட்டையும் மற்ற மனிதர்களையும் புரிந்து கொள்கிறது ..
இன்னும் பல விவரங்களையும் அது புரிந்து கொள்கிறது.
இந்த மாதிரி ஒரு சூழல் பள்ளிக்கூடத்திலே கிடைக்காது .
அங்கே எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தான் நடத்தப்படுகிறார்கள்.
ஒரு குழந்தைக்கு என்று தனியாக கவனம்செலுத்துவ-தென்பது பள்ளிக்கூடத்தில் சாத்தியமில்லை .
மேலும் வீட்டில் இருக்கிற குழந்தை எல்லார்கிட்டயும் சகஜமாக பழக கத்துகிறது.
வீட்டு சூழ்நிலை மறக்க வெளியே எங்கேயாவது போகலாம்ன்னு எண்ணமும் அதற்கு உண்டாகுது .
புதுசாக பல பேரையும் பார்க்கணும் பழகனுங்குகிற ஆசையும் ஏற்படும்.
அதோடு அக்குழந்தையின்
மனமும் விசாலமாகிறத.
இதை எல்லாம் அந்த குழந்தையின்
ஏழு வயசுலே ஏற்படுகிற சமாச்சாரங்கள் .
இப்படி அந்த குழந்தையை பக்குவமடைந்த பிறகே,
பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது தான் சரியான முறை.
அதை விட்டுட்டு
ஒரு குழந்தை
என்ன ஏதுன்னு தெரிஞ்சு இதற்கு முன்னாடியே பள்ளிக்கூடத்தில் கொண்டு
போய் விட்டு அந்த குழந்தை மனசுக்கு ஒவ்வாத பல விஷயங்களையும் சமாச்சாரங்களையும் அதன் மூளைக்கு உள்ளே திணித்து மென்மையான உணர்வுகளை சிதைத்துவிடகூடாது .
இவ்வளவும் அந்த ஜப்பான்காரர் சொன்ன கருத்து.
நம்ம ஊருக்கு இது எந்த அளவுக்கு சரியாக வருகிறது? இது ஒருபக்கம் இருந்தாலும் …
இது நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய கருத்து .
ஏனெனில்…. குழந்தை உளவியல் நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
” இளம்வயதிலேயே அன்பும் அரவணைப்பும் ரொம்ப முக்கியமாம்.
அதை பொறுத்துதான் குழந்தைகளின் எதிர்காலம் அமையும்.
*சின்ன வயசிலே தாயின் அரவணைப்பில் வளரும் குழந்தைகள் தான் பிற்காலத்தில் ரொம்ப நல்ல நிலைமைக்கு வராங்களாம்*
ஒரு குழந்தை நல்லபடியாக வாழனும்னா நல்ல ஆகாரம் மட்டும் கொடுத்தால் போதாது..
அன்பான பாசமான அரவணைப்பும் ரொம்ப அவசியம் .
இதைப்பற்றி நிறைய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி பாத்து இருக்காங்க.
சில அனாதை ஆசிரமங்களில்…
நல்ல ஆகாரம் கொடுத்து
வளர்த்த குழந்தைகள்கூட சரியா வளர்வது இல்லை ஏனென்றால் அந்தக் குழந்தைகளை தொட்டு
சீராட்டி
கொஞ்சி பேசுவதற்கு தாய் என்பது யாரும் இல்லாததுதான் குறை அந்த அனாதை ஆசிரமங்களில் ..
அதனால் இறுதியாக நம்ம ஊர் தாய்மார்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.
சின்ன வயசுலேயே குழந்தையை அன்பு அரவணைப்போடு வளருங்கள்…
அதுகளை ஒருபக்கம் விட்டுட்டு நீங்க ஒரு பக்கம் போயிடாதீங்க…
அப்படி போயிட்டீங்களனால்.. குழந்தை நிச்சயமாக வேறுவிதமாகத்தான் வளரும் இருக்கும்..




