நீங்கள் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை வாழ வேறொருவர் கனவு காண்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்..!!

தன் சொந்த PRIVATE JET விமானத்தில் பயணம் செய்யும் ஒரு BILLIONAIRE பணக்காரர் தன் பழைய நண்பர்களையும் நிம்மதியான பிரச்சனைகளே இல்லாத தன் இளம் வயது நாட்களையும் இழந்து விட்டதை எண்ணி வருந்துகிறார்.

பயணிகள் விமானத்தில் FIRST CLASS சீட்டில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு MILLIONAIRE பணக்காரர் தான் ஒரு PRIVATE JET விமானம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

சொகுசு காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு புதிய தொழிலதிபர் தான் ஒரு MILLIONAIRE பணக்காரர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

ஒரு பழைய காரில் பயணம் செய்யும் ஒரு நிறுவன பணியாளர் தான் ஒரு சொந்த தொழில் தொடங்கி ஒரு சொகுசு கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

வேலை இல்லாமல் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் நபர் தனக்கு ஒரு வேலை கிடைத்து ஒரு பழைய கார் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

சாலையில் நடந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு நபர் தான் ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கை கால்கள் முடமாகி நடக்க முடியாமல் இருக்கும் ஒரு நபர் தான் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

எப்பொழுதும் வாழ்க்கையில் மேலும் ஒரு அடுத்த நிலை இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள் .

ANOTHER THING TO CHASE.

அந்த மேலும் இன்னொரு அடுத்த நிலை என்னும் ஒரு விஷயம் தான் உங்களுக்கும் உங்கள் சந்தோஷத்திற்கும் இடையில் நிற்கிறது.

ஆனால் உங்களிடம் இப்பொழுது இருப்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக் கொள்ளாவிட்டால் அடுத்த நிலை அடுத்த நிலை என்று துரத்தி துரத்தியே உங்கள் வாழ்க்கை முடிந்து விடும்,

நீங்கள் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை வாழ வேறொருவர் கனவு காண்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்,

இதைத்தான் கண்ணதாசன் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்று சொல்லியிருந்தார்.

Read Previous

முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.. தவெக முழக்கம்..!!

Read Next

சின்ன வயசுலேயே குழந்தையை அன்பு அரவணைப்போடு வளருங்கள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular