நாம இல்லனா இந்த உலகம் என்ன ஆகும்னு நினைக்காதீங்க..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

உலகம் முழுவதும் பல நூற்றாண்டு காலமா சர்வ சாதாரணமாக நடக்கும் விஷயம் திருமணத்திற்கு பிறகு பிள்ளைகள் பிறப்பது.

பசியறியாமல் நல்ல பழக்க வழக்கங்கள் கற்பித்து உணவு, உடை கொடுத்து பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோரின் தலையாய கடமை.

அதே பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுத்து ஆளாக்குவது இரண்டாவது கடமை.

அடுத்து வேலை வாய்ப்பு. 20+ வயதில் இருக்கும் ஒருவனுக்கும/ ஒருத்திக்கு, தான் படித்த படிப்புக்கு வேலை தேடிக் கொள்ளும் அளவுக்கு புத்தி நல்லாவே வளர்ந்திருக்கும்.

இந்த வேலையையும் பெற்றோரே தேடிக்கொடுக்க வேண்டும் என்பது கடமை அல்ல, செய்ய வேண்டியது, உதவி மட்டுமே.

திருமண விஷயத்திலும் அப்படியே. ‘பெற்றோர் பொறுப்பு’ என பிள்ளைகள் விட்டு விட்டால் அவர்கள் விருப்பத்தையும் கலந்தாலோசித்து திருமணம் செய்து வைக்கலாம்.

பெற்றோர் உதவியைத் தான் செய்ய வேண்டுமே தவிர ஆதி முதல் அந்தம் வரை மொத்த விஷயமும் தன்னுடைய இஷ்டப்படிதான் நடக்க வேண்டும் என்று தீர்மானிப்பது தேவையில்லாத ஆணி.

இங்கே காதல் திருமணம் ஜாதி மறுப்பு திருமணம் வசதி வாய்ப்பில் ஏற்ற இறக்கம் போன்றவை முளைக்கும் போதுதான் பிரச்சனை வெடிக்கும்.

பையனோ பெண் பிள்ளையோ நல்லவராக இருந்தால், முடிந்தவரை பிள்ளைகளின் மனதை புரிந்து கொண்டு அவர்களின் இஷ்டத்தை பூர்த்தி செய்வது பெற்றோருக்கு நல்லது.

காதல் விஷயத்தில் வீட்டை விட்டு ஓடி விட்டால் தலை முழுகி விட்டு அடுத்த வேலையை பார்ப்பது சாலச் சிறந்தது.

குடும்ப மானம் போச்சே என்று பதறுவதெல்லாம் வீண் வேலை என்பது பின்னாடி இந்த சமூகம் எந்த வகையிலலும் நமக்கு உதவி செய்ய முன்வராது என்பதை கொள்ளும்போது சத்தியமாக புரியும்.

ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். சமூகம் என்பது கூலிங் கிளாஸ் போட்ட பெண் மாதிரி. அது நம்மளேயே உத்து பாத்துகிட்டு இருக்குற மாதிரி தெரியும்.ஆனா ஆனா உண்மையில் அது வேற எங்கேயோ பார்த்துட்டு இருக்கும்.

மணவாழ்க்கை அமைத்துக் கொடுக்கும் விஷயத்தில் கூட்டுப் பொறுப்புதான். முழுக்க முழுக்க பெற்றோருக்கான முழு கடமை அல்ல.

உலகம் முழுவதும் பெரும்பாலலான நாடுகளில் இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது.

வளர்த்துப் படிக்க வெச்சு வேலை தேடிக்கிற அளவுக்கு பிள்ளைகளை ஆளாக்கி தங்களுடைய கண்ட்ரோல நிறுத்திப்பாங்க. அதற்குப் பிறகு பிள்ளைகள் தான் அவரவர் தகுதிக்கேற்ப திறமைக்கேற்ப வாழ்க்கையை சுதந்திரமா கொண்டு போவாங்க.

ஆனால் இங்குதான் எல்லாவற்றையும் கடைசி வரை நாங்களே தீர்மானிப்போம் என்று பெற்றோர்கள் அடம்பிடிக்கிறார்கள்.

ஒரு பொம்பளைய எடுத்துக்குங்க. புருஷன்காரனும் தனக்கு கட்டுப்படணும், பொண்ணு புள்ளையும் கட்டுப்படணும்.

புள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு படுத்து குடும்பம் நடத்த வர்ற மருமகளும் நான் கிழிச்ச கோட்டை தாண்டக்கூடாது. இன்னொரு பக்கம் புள்ளையும் மருமக முந்தானைல மாட்டிக்க கூடாது.

அதே நேரத்துல இன்னொரு இடத்துக்கு வாழ்க்கை போட்டு போன பிறகும் மகள் தன் பேச்சைத்தான் கேக்கணும். மகள் சொல்படி ஆடுற அளவுக்கு மருமகனை மாத்தி வைக்கலன்னா மாமியாருக்கு தூக்கம் வராது.

பொம்பளைக்கு இருக்கிற புத்தில ஆம்பளைக்கும் பாதி இருக்கும்

இன்னும் சில குடும்பத்தில் பேரன் பேத்தியும் தங்கள் கண்ட்ரோலில் தான் இருக்க வேண்டும் என்று விரும்புவர்களும் உண்டு.

ஒரு கட்டத்தில் அடுத்த தலைமுறையை வாழ விட்டு ஒதுங்கி நின்னு வேடிக்கை பாக்கற புத்தி வந்து தொலையனும். பசங்களுக்கு பிரச்சனை வந்தா மட்டும் போய் உதவணும்.

ஆனா இங்க கட்டையில போற வரைக்கும், எல்லாமே எங்க இஷ்டப்படி தான் நடந்தாகணும்னு பெரியவர்கள் வீம்பு பிடிக்கிறதாலதான் பிரச்சனை.

இப்ப நடந்திருக்கிற நாமக்கல் ஆர்டிஓ தற்கொலை மேட்டரையே எடுத்துக்கோங்க.

பொண்ணு வேற ஜாதி பையன லவ் பண்ணுதுன்னு சொல்லிட்டு பேரன்ட்ஸ் ரெண்டு பேரும் தற்கொலை.

வாழ்க்கையில பொண்ணோட கல்யாணம் மட்டும்தான் பிரச்சனையா? ஏன் பெத்த மகன் இன்னொருத்தன் இருக்கானே அவனுக்கு வாழ்க்கை இல்லையா?

அவன் வாழ்க்கை மட்டும் அம்போன்னு போகலாமாம். என்னங்கடா நியாயம்.

ஆர்டிஓவை எடுத்துக்கோங்க இவர் பொண்ணு மேட்டருக்கு தற்கொலை பண்றாரு.

இவரை நம்பி ஒருத்தன் பொண்ணு குடுத்தானே? அவன் கதி என்னன்னு யோசிச்சு பாத்தீங்களா? கடைசி வரைக்கும் நல்லா வாழ வைக்காம ரயில் தண்டவாளத்தில துண்டு ஆக்கறதுக்கா வளர்த்து கொடுத்தான்?

இந்த மாதிரி ஏகப்பட்ட கேள்விகளை எல்லா தரப்பும் பாதிக்கப்பட்டு இருக்கும்.

எந்த கட்டத்தில் இருந்தால் என்ன, கடைசி வரை கூட வரப்போற பொண்டாட்டி புருஷனுக்காக வாழ்ந்து தொலைஞ்சிட்டு போங்க.. உங்களுக்கான வாழ்க்கை வாழ்ந்து தொலைங்க..

மத்தவங்க அவங்கவங்களுக்கான வாழ்க்கையை அவங்களே பாத்துப்பாங்க.

நாம இல்லனா இந்த உலகம் என்ன ஆகும்னு நினைக்காதீங்க. நாம இல்லாத பிறகும் இதே போல சீரும் சிறப்புமாத்தான் இயங்கிக்கிட்டு இருக்கப் போகுது.

Read Previous

படித்து ரசித்த ஒரு அருமையான கதை..!! நீங்களும் படிங்க.. படிதத்தில் பிடித்தது..!!

Read Next

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு..!! அன்புமணி கருத்து – பாமக நிறுவனர் ராமதாஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular