உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம்..!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடமும், இங்கிலாந்து 2ஆவது இடமும் பிடித்துள்ளன.

4ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர்களில் தற்போது கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.

அந்த வகையில், ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன.

இந்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த இரு அணிகள் வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இங்கிலாந்து 2ஆவது இடத்திலும், இந்தியா 4ஆவது இடத்திலும் உள்ளன.

Read Previous

TNPSC குரூப் 2 & 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு..!! 645 காலியிடங்கள்..!! உடனே விண்ணப்பிக்கவும்..!!

Read Next

கிருஷ்ணகிரி: சிறுவனுக்கு சிகிச்சையளிக்காமல் செல்போனை பார்த்த மருத்துவர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular